HIGHCOURT DISMISS THE CASE WHICH IS ABOUT A STUDENT DEATH IN CHENNAI SRS
வாத்து நடை தண்டனையால் உயிரிழந்த மாணவன் - வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்.
பள்ளிக்கு தாமதமாக வந்ததற்கு தண்டனையாக வாத்து நடை போடச் செய்ததால் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர், தாளாளர் மீதான குற்ற வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கு தாமதமாக வந்ததற்கு தண்டனையாக வாத்து நடை போடச் செய்ததால் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர், தாளாளர் மீதான குற்ற வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவிக நகர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த முரளி என்பவரின் மகன், தாமதமாக வந்ததால் பள்ளி மைதானத்தை சுற்றி வாத்து நடை போடும்படி தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி வாத்து நடை மேற்கொண்டிருந்த மாணவன், திடீரென மயங்கி விழுந்தான். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த மாணவனை, பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, மாணவனின் தந்தை முரளி அளித்த புகாரின் அடிப்படையில், திருவிக நகர் போலீசார், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெய் சிங், தலைமை ஆசிரியர் அருள், தாளாளர் ஜோசப் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மகனைப் பறிகொடுத்த தந்தைக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருந்தார். மூவரும் சேர்ந்து 10 லட்ச ரூபாயை வழங்கியதாக கூறியதையடுத்து, பள்ளி உடற்கல்வி ஆசிரியர், தலைமையாசிரியர் மற்றும் தாளாளருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உடற்பயிற்சியின் அறிவியல் பூர்வமான வளர்ச்சிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார்.