தேசிய பட்டியலின ஆணையத்தைக் கலைக்கக்கோரி வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

தேசிய பட்டியலின ஆணையத்தைக் கலைக்கக்கோரி வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றம்.
  • Share this:
தேசிய பட்டியலின ஆணையத்தைக் கலைக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக பட்டியலினத்தை சாராதவரும், பாஜக-வை சேர்ந்தவர் கொடுத்த புகார் மீது தேசிய பட்டியலின ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால் பரமகுடியில் பட்டியலினத்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம், கோவை மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பட்டியலின மக்கள் பலியானது உள்ளிட்ட பல விவகாரங்களில் தேசிய பட்டியலின ஆணையம் இதுவரை எந்த முக்கிய நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பதாலும் அரசியல் ஆதாயம் அடையும் நோக்கத்தில் ஆணையம் செயல்படுவதாக கூறி ஆணையத்தை கலைக்க உத்தரவிட வேண்டுமென மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் செயலாளர் மற்றும் மத்திய அரசு ஆகியோர் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Also see...
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading