புதுச்சேரியில் 500-ஐ தாண்டியது கொரோனா தொற்று எண்ணிக்கை...
புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 39 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 502-ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
- News18 Tamil
- Last Updated: June 25, 2020, 1:12 PM IST
புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 39 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 502-ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் 32 நபர்களுக்கும், காரைக்காலில் 7 நபர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 306 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 187 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல் மாநிலத்தில் இதுவரை 9 நபர்கள் கொரோனா தொற்றால் உயிர் இழந்துள்ளனர் என்றார்.
தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 502-ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்த சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தினமும் 40 நோயாளிகள் அதிகரிப்பதால் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை நாளை முதல் நிறுத்தப்படுவதாகவும், அங்குள்ள நோயாளிகள் சட்டசபை அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
Also read... அடுத்த ஒருவாரத்தில் கொரோனா பாதிப்பு 1 கோடியை எட்டும்... உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தகவல்!நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்வதால் ஒருவாரத்தில் அரசு கோவிட் மருத்துவமனையில் படுக்கைகள் இருக்காது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 5000 படுக்கைகளை தயார் செய்துள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.