Home /News /live-updates /

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 216 ஆக உயர்வு

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 216 ஆக உயர்வு

சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்றால் 216 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலவரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறுகையில், புதுச்சேரியில் புதிதாக 14 பேருக்கு கொரோனா  நோய் ஏற்பட்டுள்ளது.

மொத்தமாக 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது 113 பேர் சிகிச்சையில் உள்ளனர். 99 பேர் குணமடைந்துள்ளனர் என்றார்.

நவம்பர், டிசம்பரில் நோய் தொற்று அதிகமாகும் என மத்திய அரசு தெரிவிக்கிறது என்றும், மே மாதம் முதல் ஜூன் வரை நோய் தொற்று சராசரியாக 7% இருந்தது,  இந்த வாரம் மட்டும் 10% இருக்கிறது. அதனால் டிசம்பரில் அதிகமாக கூடும். இதனால் 6 மாதங்களுக்கு நோய் தடுப்புக்கு தயாராக சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க முதல்வரை கேட்க உள்ளோம்.

 

கொரோனாவுக்கென தனி ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும், மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்கள் தேவை என அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

சமூக இடைவெளி இன்றி மாஸ்க் அணியாமல் வந்தால்  500 ரூபாய் முதல் முறை. இரண்டாவது முறை 1000 ரூ என அண்டை மாநிலங்களில்  கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. இதே போன்ற நடவடிக்கையை  அரசு விதிக்க வேண்டும் எனவும் மல்லாடி கிருஷ்ணாராவ் வலியுறுத்தினார்.

அரசும், சுகாதார துறையும் 24 மணி நேரம் செயல்பட்டாலும் மக்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால் நோயை தடுக்க முடியாது எனவும் அவர் கூறினார். பேட்டியின் போது உடனிருந்த சுகாதார துறை இயக்குனர் மோகன்குமார், இன்று புதிதாக புதுச்சேரியில் 12 நபர்களுக்கும் காரைக்காலில் 2 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 113 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 99 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் மாநிலத்தில் இதுவரை 4 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜிப்மர் ஓட்டுநரின் மாமனார்  (75 வயது) உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரியில் நடந்த மகளின் வளைகாப்பிற்கு சென்னையில் இருந்து கடந்த மாதம் வந்தவர். ஜிப்மரில் சிகிச்சை பயனளிக்காமல் இறந்தார் என்றும் அவர் கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மாஸ்க் தயாரிக்கும் நிறுவனத்தில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த தொழிற்சாலையை மூட அறிவுறுத்தியுள்ளோம் என்றும் சுகாதார துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்தார்.

Also read... இங்கிலாந்தில் சிறுபான்மை இனத்தவருக்கான அரசு ஆணையம் - பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவிப்பு
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: CoronaVirus, Puducherry

அடுத்த செய்தி