தமிழ்நாட்டில் 95,00,000 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.
கொரோனா மூன்றாவது அலை பரவி வரும் வேளையில் மூன்றாவது டோஸ் என்ற பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இரண்டாவது டோஸ் செலுத்த உரிய நேரம் வந்தும் 95.2 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது.
கோவிஷீல்டு முதல் டோஸ் செலுத்திக் கொண்ட 79.3 லட்சம் பேரும் கோவாக்சின் செலுத்திக் கொண்ட 15.8 லட்சம் பேரும் தங்கள் இரண்டாவது தவணையை உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை.
கடந்த 21ம் தேதி ஒரு கோடியே 26,647 பேர் இரண்டாவது டோஸ் உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை. கடந்த மூன்று நாட்களில் தவணை தவறிய 5,00,000 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதால் தற்போது இந்த எண்ணிக்கை 95,00,000 குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 5,78,91,000 பேர் உள்ளனர். இதில் 89% அதாவது 5,15,21,353 பேர் முதல் டோஸ் செலுத்தியுள்ளனர்.
இரண்டாவது டோஸ் செலுத்தியவர்கள் 3,76,31,891 பேர் ஆவர். அதாவது 65% பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர். தவணை தவறிய 95,00,000 பேரும் தடுப்பூசி செலுத்தியிருந்தால் தமிழ்நாட்டில் 80% பேர் இரண்டாவது டோஸ் செலுத்தியிருந்திருப்பார்கள்.
தமிழகத்தில் இது வரை சுகாதாரத்துரையினர் 97% பேர் முதல் டோஸ் மற்றும் 64% பேர் இரண்டாவது டோஸ் செலுத்தியுள்ளனர். முன்களப் பணியாளர்கள் 82% பேர் முதல் டோஸ் , 45% பேர் இரண்டாவது டோஸ் செலுத்தியுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 63% பேர் முதல் டோஸ் மற்றும் 49% பேர் இரண்டாவது டோஸ் செலுத்தியுள்ளனர்.
Also read... ஒரே நாளில் புதுச்சேரியில் 1130 பேருக்கு கொரோனா தொற்று - 2 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் இரண்டு லட்சத்து 17,963 பேர் செலுத்தியுள்ளனர். இது வரை 9.29% சுகாதாரத்துறையினர், 4.57% முன்களப் பணியாளர்கள், 4.18% முதியவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர்.
இரண்டாவது டோஸ் செலுத்தாதவர்களை மாவட்ட வாரியாக கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.