BREAKING சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்க்க நீதிமன்றம் அனுமதி

BREAKING சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்க்க நீதிமன்றம் அனுமதி
  • Share this:
உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ராஜகோபாலை மருத்துமனைக்கு அழைத்து செல்வது, சிகிச்சை அளிப்பதற்கான செலவுகளை மனுதாரரான அவருடைய மகன் பொறுப்பேற்றுக்கொள்வதாக தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை பின்பற்றவும் சிறைத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான சரவணன் பவன் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உடல்நிலை சரியில்லை என காரணம் கூறி சரணடைய அவகாசம் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஜூலை 9ம் தேதி தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, அன்றைய தினமே தனியார் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்ட அவர், சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரண்டைந்தார்.

அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தண்டனைக் கைதிகளுக்கான பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், ராஜகோபாலின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அனுமதிக்க உத்தரவிடக்கோரி அவரது மகன் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க அனுமதி வழங்கினர்.
First published: July 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்