முகப்பு /செய்தி /Breaking and Live Updates / ஷாருக்கானின் பதான் படத்துக்கு பாதுகாப்பை உறுதி செய்த குஜராத் அரசு

ஷாருக்கானின் பதான் படத்துக்கு பாதுகாப்பை உறுதி செய்த குஜராத் அரசு

பதான்

பதான்

இந்த விவகாரத்தை உடனடியாக கவனிக்குமாறு குஜராத் அரசின் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பதான் படத்துக்கு பாதுகாப்பு தருவதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள ‘பதான்’ திரைப்படம் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை திரையிடும் குஜராத் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின.

இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், குஜராத் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன், இந்த விவகாரத்தை உடனடியாக கவனிக்குமாறு குஜராத் அரசின் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. அந்தக் கடிதத்தில் குஜராத் மல்டிபிளக்ஸ் தலைவர் மனுபாய் படேல் கையெழுத்திட்டுள்ளார்.

குஜராத் அரசு தற்போது மாநிலத்தின் மல்டிபிளக்ஸ் சங்கத்திடம் அவர்களுக்கு தங்களின் முழு ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய மனுபாய் படேல், "அவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அவர்கள் எங்களுக்கு முழு ஆதரவு இருப்பதாக உறுதியளித்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வளவு பெரிய படம் வருவதால் எங்களுக்கு பாதுகாப்பு தேவை எனும் காரணத்தால், இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்றார்.

ரஜினிகாந்த்? சூர்யா? ஜெய் பீம் இயக்குநரின் அடுத்தப் படத்தில் யார் ஹீரோ?

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சமீபத்திய உரையில், "நாங்கள் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறோம், எங்களில் சிலர் திரைப்படங்களைப் பற்றி தேவையற்ற கருத்துகளை வெளியிடுகிறார்கள். தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Shah rukh khan