ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

14 கொலை வழக்குகள்.. அம்மா பெயர சொன்னாலே ஓட்டுதான்.. குஜராத்தை அலறவைத்த லேடி டான்.. பரபர வரலாறு!

14 கொலை வழக்குகள்.. அம்மா பெயர சொன்னாலே ஓட்டுதான்.. குஜராத்தை அலறவைத்த லேடி டான்.. பரபர வரலாறு!

குஜராத் காட்மதர்

குஜராத் காட்மதர்

குஜராத்தில் உள்ள ஸ்வாத்யா இயக்கத்தின் தலைவராக இருந்த பாண்டுரங் சாஸ்திரி என்பவருடன் கூட்டணி அமைத்து தனது கணவரின் கொலைக்கு பழிவாங்கினார் சந்தோக்பென்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வேறு யாருடைய ஆதரவையும் பெறாமல் தன்னந்தனி ஆளாக குஜராத்தில் ஒரு வேட்பாளர் தனது அம்மாவின் பெயரைச் சொல்லி வாக்கு சேகரிதது வருகிறார். அதோடு இந்த தேர்தலில் தான் வெற்றியும் பெறுவேன் என நம்பிக்கையுடன் சுற்றி வருகிறார். இவர் தான் தற்போதைய குஜராத் தேர்தலின் பேசுபொருள்.

  2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக நடைபெற பெற உள்ளது குஜராத் சட்டமன்ற தேர்தல். அங்குள் 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோதாவில் இறங்கி கலக்கி வரும் நிலையில் குடியானா தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் ஒருவர் யாரையும் நம்பாமல் வித்தியாசமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

  காந்தல் ஜடேஜா என்கிற அந்த வேட்பாளர் தன் அம்மாவின் பெயர் மற்றும் செல்வாக்கு மட்டும் போதும் தான் வெறறி பெறுவதற்கு என்று கூறிக்கொண்டு அதன்படி தன் அம்மாவின் பெயரைச் சொல்லியே பரப்புரை மேற்கொண்டு வருகிறார். யார் இவருடைய அம்மா எனத் தெரியாதவர்களுக்கு அவரைப் பற்றிய ஒரு அறிமுகம்.

  இதையும் படிங்க: பிரச்னை தீர காட்டுக்குள் உடலுறவு.. ஜோடி மீது பெவிகுயிக் பசையை ஊற்றி கொடூரமாக கொலை செய்த மந்திரவாதி!

  1986 வரை வெளி உலகம் தெரியாமல் சாதாரண பெண்ணாக இருந்து, தனது கணவரின் கொலைக்கு பழிவாங்க புறப்பட்டு டானாக மாறிய சந்தோக்பென் சர்மன்பாய் ஜடேஜா. குஜராத்தில் உள்ள ஸ்வாத்யா இயக்கத்தின் தலைவராக இருந்த பாண்டுரங் சாஸ்திரி என்பவருடன் கூட்டணி அமைத்து தனது கணவரின் கொலைக்கு பழிவாங்கினார் சந்தோக்பென். அப்படியே டானாகிவிட்டார். இவர் மீது 14 கொலை வழக்குகள், 500க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. படிப்படியாக முன்னேறி 1990-களில் குஜராத்தின் காட்மதர் என அழைக்கப்படும் அளவிற்கு செல்வாக்கு பெற்றார். அந்த செல்வாக்கின் அடிப்படையில் குடியானா தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  கொஞ்சம் கொஞ்சமாக தனது நடவடிக்கைகளை குறைத்துக் கொண்ட சந்தோக்பென், 2011 ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார். அவரது மகன்தான்  காந்தல் ஜடேஜா.

  கடந்த இரண்டு முறை தேசியவா காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதே குடியானா தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தற்போது காந்தல் ஜடேஜா பாஜகவுடன் இணக்கம் காட்டி வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் குடியானா தொகுதியில் களமிறங்கியுள்ளார் காந்தல் ஜடேஜா.

  இவர் தான் ஒரு காலத்தில் காட்மதராக இருந்த தனது தாயின் பெயைரைச் சொல்லி வாக்கு சேகரித்து வருகிறார். இது எனது தாயின் சொந்த ஊர்.. நான் எந்தக் கட்சியின் சார்பில் தேர்தலில் நின்றாலும் மக்கள் கட்சியைப் பார்க்க மாட்டார்கள். எனது  தாயைத் தான் பார்ப்பார்கள். அவர் பெயர் போதும் எனக்கு வெற்றியைத் தேடித்தர… என்று கெத்தாக கூறி வருகிறார் காந்தல் ஜடேஜா… நம்பிக்கை.. அதானே எல்லாம்

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Gujarat