Exclusive: திருநீர்மலை ஏரி விவகாரம் -சோம்பலில் அரசுத்துறைகள்: பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம்!

திருநீர்மலை ஏரி

உத்தரவை மதிக்காமல் கமிட்டி மற்றும் மாசுக்கட்டுபபாட்டு வாரியம் ஆகியவை இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாமல் இருப்பது, அவர்களின் சோம்பல் மனப்பான்மையை காட்டுவதாக தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.

  • Share this:
திருநீர்மலை ஏரி அருகே மருத்துவக் கழிவு கொட்டும் விவகாரத்தில் உத்தரவை மதிக்காத துறைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருநீர்மலை ஏரி அருகில் உயிரி மருத்துவக் கழவுகளை கொட்டுவதாகவும், அது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கடந்த ஜனவரி மாதம் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

தொடர்ந்து அது தொடர்பாக விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு துறைகள் சார்பில் தனித்தனி அறிக்கையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

மேலும் படிக்க: தண்ணீரே இல்லாத சிங்கப்பூரில் கூட, தூய்மைக் குடிநீர்  திட்டம் செயல்படுத்தப்படும் போது தமிழ்நாட்டில் முடியாதா என்ன: ராமதாஸ்


அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில்,  ‘பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மதிக்காமல் கமிட்டி மற்றும் மாசுக்கட்டுபபாட்டு வாரியம் ஆகியவை இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாமல் இருப்பது, அவர்களின் சோம்பல் மனப்பான்மையை காட்டுவதுடன், தொடர்புடைய துறைகள், சுற்றுச்சூழலை பாதுகாப்பில் எந்த அளவுக்கு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது’ என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மாதாமாதம் ரீடிங் எடுங்க... பில் கட்ட கஷ்டமா இருக்குன்னு சொன்ன தங்கர் பச்சான் வீட்டுக்கு படையெடுத்த மின்சார அதிகாரிகள்...


மேலும், “ தீர்ப்பாய உத்தரவுகளை மதிக்காமல் இருப்போர் மீது நடவடிக்கை எடுக்க இந்த தீர்ப்பாயம் போதிய அதிகாரத்தை பெற்றுள்ளது என்ற உண்மையை அரசுத் துறைகள் கவனிக்க மறந்துவிட்டன. எனவே, கூட்டுக்குழுவும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், வழக்கின் அடுத்த விசாரணை நாளான ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அறிக்கையை அமர்வில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Published by:Murugesh M
First published: