தமிழ்நாடு சட்டமன்றம் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கூடியது. ஆளுநர் உரையாற்ற வந்தபோது, அவருக்கு எதிராக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட திமுக தோழமைக் கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் திராவிட மாடல், பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்க்க, அதற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதுனால் அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இந்த நிலையில் ஆளுநர் உரையின்போது நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, “ஆளுநர் உரையின் போது காங்கிரஸ், விசிக, பாமக, மமக, வேல்முருகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோஷம் எழுப்பினர். இது தவிர்த்திருக்கப்பட வேண்டும். ஆளுநர் உரையை தடுக்கக்கூடாது. மீறினால் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும். இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் தவிர்க்கபட வேண்டும். ஒருபோதும் ஆளுநர் பேசும் போது களங்கம் ஏற்படும் வகையில் இந்த அவை நடந்து கொள்ளாது. ஆளுநர் உரையின் போது சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட கட்சி எம்.எல்.ஏக்கள் தங்களின் கோரிக்கையை மட்டும் கோஷமாக முன்வைத்து சென்றனர். அவர்கள் தர்ணாவோ, மேஜை மீது ஏறியோ அமளி செய்யவில்லை. எனவே இனிமே இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்க கூடாது என்பதை தீர்ப்பாக கூறிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
தயாரித்து கொடுத்த ஆளுநர் உரைக்கு இசைவு தெரிவித்து ஒப்புதல் அளித்த பின், அவர் பேசியதில் பல குளறுபடிகள் இருந்தன என்று குறிப்பிட்ட ஆளுநர் உரையை வாசிப்பதற்கு மட்டுமே கடமையே தவிர, அதில் இருக்கும் உரையை மாற்றுவதற்கு அனுமதி இல்லை. கவர்னர் வாசித்து அளிப்பதோடு முடிந்து விட்டது அவருடைய கடமை. அவர் அதை கடந்து சென்றதால் அசாதாரண சூழல் ஏற்பட்டது. ஆளுநர் ஒரு சில விஷயங்களை திருத்தியும் புகுத்தியும் பேசியதை தொடர்ந்து ஒரு சில சலசலப்பு ஏற்பட்டது. அதனை முதலமைச்சர் கவனித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கன்னியத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி அவை மாண்பை காத்தார். அப்போது மதி நுட்பத்துடன் துல்லியமாக முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்து செயல்பட்டார். 9ம் தேதி ஏற்பட்ட அசாதாராண சூழலுக்கு அரசு பொறுப்பு அல்ல. முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை கருணாநிதி பெற்றுத்தந்தார். அதேபோல் இந்தியா முழுமைக்கும் அவையில் ஆளுநர் எந்த நிலையில் இருக்க வேண்டும் என வரையறுத்து காட்டி அவையின் மாண்பை நிலைநாட்டி உள்ளார் முதலமைச்சர்.
மேலும், எதிர்க்கட்சியோ, ஆளும் கட்சியோ எந்த கட்சியாக இருந்தாலும் எதிர் கருத்தை சொல்ல வேண்டும் என்றால் அரசை தான் சொல்வார்களே தவிர ஆளுநர் செய்தார் என்று இதுவரை கேட்டது இல்லை, அப்படி ஒரு மரபும் அல்ல. ஆளுநர் என்பவர் ஒரு நியமிக்கப்பட்டவர்தான். சட்டப்பேரவையில் அசாதாரண சூழலை உருவாக்கியது அரசு அல்ல ஆளுநர் தான்.
முதலமைச்சர் சுட்டி காட்டியது இந்த அவைக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஆளுநர் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் உள்ளது. முதலமைச்சரின் நடவடிக்கையை இந்த அவை பாராட்டுகிறது. தமிழ்நாடே முதலமைச்சரின் துணிவை பாராட்டுகிறது” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.