பசு மாடுகள் மட்டுமே பிறக்கும் விந்தணுக்கள் வழங்கப்படும்! மத்திய அமைச்சர் அறிவிப்பு

நாங்கள், பசு மாடு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை உருவாக்குவோம். அதன் மூலம், ஏராளமான பசு மாடுகளை உருவாக்க முடியும்.

பசு மாடுகள் மட்டுமே பிறக்கும் விந்தணுக்கள் வழங்கப்படும்! மத்திய அமைச்சர் அறிவிப்பு
கிரிராஜ் சிங்
  • News18
  • Last Updated: September 1, 2019, 7:38 PM IST
  • Share this:
பசு மாடுகள் மட்டுமே பிறக்கும் வகையில் விந்தணுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் காலங்களில் மாடுகளுக்கு கருவூட்டல் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்ற ‘மதர் டெய்ரி’ நிறுவனத்தின் ஒரு விழாவில் மத்திய கால்நடை வளர்ப்புத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘வரும் காலங்களில் பாலினம் உறுதிபடுத்தப்பட்ட விந்தணுங்கள் மூலம் பசு மாடுகள் பிறப்பது உறுதி செய்யப்படும். அதன் மூலம், விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும். 2019-2020-ம் ஆண்டுகளில் பாலினம் உறுதிப்படுத்தப்பட்ட 30 லட்சம் விந்தணுக்கள் வழங்கப்பட்டுள்ளது.


2025-ம் ஆண்டுகளில் 10 கோடி விந்தணுக்கள் வரை வழங்கப்படும். அது, 10 கோடி பசு மாடுகள் உருவாவதை உறுதிப்படுத்தும். நாங்கள், பசு மாடு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை உருவாக்குவோம். அதன் மூலம், ஏராளமான பசு மாடுகளை உருவாக்க முடியும். 4 எம்ப்ர்யோ தொழில்நுட்பத்தின் மூலம் பசு மாடுகள் அதிகம் பால் கறப்பதை உறுதிப்படுத்த முடியும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் 20 லிட்டர் வரை பசு மாடுகள் பால் கொடுக்கும். இது ஒரு புரட்சி’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: September 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்