மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராவாரா கேரி கர்ஸ்டன்?

2011 உ.கோப்பையை வென்ற பிறகு கேரி கர்ஸ்டனை தோளில் சுமந்த இந்திய அணியினர்.

2011 உலகக்கோப்பையை தோனி தலைமையில் வென்ற இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டம் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராவாரா என்ற ஆர்வம் எழுந்துள்ளது.

 • Share this:
  டி20 உலகக்கோப்பை 2021-க்குப் பிறகு ரவி சாஸ்திரி உள்ளிட்ட இந்திய அணியின் பயிற்சிக்குழுவில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 2011 உலகக்கோப்பையை தோனி தலைமையில் வென்ற இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டம் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராவாரா என்ற ஆர்வம் எழுந்துள்ளது.

  பயிற்சியாளர்களில் வித்தியாசமானவர் கேரி கர்ஸ்டன், இந்திய வீரர்கள் மீது சொந்த, தனிப்பட்ட அக்கறை செலுத்தியவர், அதனால்தான் தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்பு வலுவான தென் ஆப்பிரிக்காவை அதன் மண்ணில் எதிர்கொள்ள தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து கொண்டு இந்திய வீரர்கள் சிலரை முன்னமேயே அங்கு அழைத்துச் சென்று அந்த சூழ்நிலைக்கு ஏற்ப ஆட தயார்படுத்தினார், மற்ற பயிற்சியாளர்கள் வெற்றியின் மீதுதான் கவனம் செலுத்துவார்கள் இவர் வெற்றியுடன் இந்திய அணி வீரர்கள் அயல்நாடுகளில் அவமானப்படக்கூடாது என்பதை ஆத்மார்த்தமாக விரும்பிய ஒரு அரிய பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன்.

  ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்திருக்கிறார் கேரி கர்ஸ்டன். இந்நிலையில் அவர் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராவாரா என்று அவரிடம் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்று கேட்க அவர் கூறியதாவது: “இப்போதைக்கு இந்திய அணிக்கு பயிற்சியாளராக வர வேண்டும் என்ற எண்ணமில்லை.

  பயிற்சிக் கல்வி என்ற ஒரு புராஜெக்டில் இருந்து வருகிறேன், இது ஆன்லைன் கிரிக்கெட் கோச்சிங், சான்றிதழ் அளிப்பது, அகாடமிகளில் உள்ள பயிற்சியாளர்களுக்கே பயிற்சி அளித்து சான்றிதழ் தரும் அமைப்பாகும். எனக்கு இந்த பயிற்சிக் கல்வி என்ற கருத்தாக்கம் மிகவும் பிடித்திருக்கிறது. என் சொந்த அனுபவம் வாயிலாக நான் ஒரு வீரருக்கு பயிற்சியளித்து தரமான வீரராக உருவாக்குவது என்றால் என்னவென்பதை அறிந்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை கோச் எஜுகேஷன் அளித்துள்ளது.

  தோனி-கேரி கர்ஸ்டன்


  நான் இருந்த காலத்தை விட இந்திய அணி இப்போது கிரிக்கெட் ஆட்டத்தின் முன்னணியில் இருக்கிறது. விராட் கோலி நாட்டுக்காக பிரமாதமாக செயலாற்றி வருகிறார். போகப் போக இன்னும் பெட்டர் ஆவார். இப்போது இந்திய அணியில் பிரமாதமான மேட்ச் வின்னர்கள் பலர் இருக்கின்றனர்.” இவ்வாறு கூறினார் கேரி கர்ஸ்டன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: