• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • இலங்கை நாடாளுமன்றம்: பிரதமர் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து அமைச்சரவையில் இடம்பிடித்த 4 பேர்..

இலங்கை நாடாளுமன்றம்: பிரதமர் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து அமைச்சரவையில் இடம்பிடித்த 4 பேர்..

(Reuters)

(Reuters)

  • News18
  • Last Updated :
  • Share this:
    இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து நான்கு பேர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.

    இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சி மொத்தமுள்ள 225 இடங்களில் 145 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

    புதிய நாடாளுமன்றத்திற்கான அமைச்சரவை பதவி ஏற்பு விழா நேற்று கண்டியில் நடைபெற்றது. இதில் நிதி, நகர அபிவிருத்தி, மத விவகாரம் உள்ளிட்ட துறைகளை மகிந்த ராஜபக்ச தன்வசம் வைத்துள்ளார்.

    Also read... அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசலா...? அமைச்சர் ஜெயக்குமார் பதில்

    மேலும், கோத்தபய ராஜபக்சவின் மூத்த அண்ணன் சாமல் ராஜபக்சவுக்கு நீர்பாசனம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறையும், அவரது மகன் ஷாசீந்திர ராஜபக்சவுக்கு உயர் தொழில்நுட்பத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.



    அதேபோல், மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தில் இருந்து மட்டும் 4 பேர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர். அதே நேரத்தில், டக்ளஸ் தேவானந்த, அலி சப்ரி உள்ளிட்ட 4 தமிழர்களுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: