8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்த காட்டு வேட்டை நாய் இனத்தின் எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிப்பு!

ancient wild dog - மாதிரி படம்

இந்த பண்டைய நாய் இனம் முதன்முதலில் கிழக்கு ஆசியாவில் சுமார் 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை என்றும், இந்த இனம் சுமார் 8,00,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டது என்றும் யூகிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
ஜார்ஜியாவின் கிராமமான டிமானிசி என்ற இடத்தில் பழங்கால நாய் ஒன்றின் எச்சங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், ஸ்பெயினின் காடலான் இன்ஸ்டிடியூஷன் ஃபார் ரிசர்ச் அண்ட் அட்வான்ஸ்ட் ஸ்டடீஸ், புளோரன்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பிற ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள் ஒன்றாக சேர்ந்து பழங்கால நாயின் எச்சங்களை அடையாளம் கண்டதாக தெரிவித்துள்ளனர்.

நாயின் எலும்புக்கூட்டை பகுப்பாய்வு செய்ததன் மூலம், அவை கேனிஸ் (செனோசியான்) லிகானோயிட்ஸ் இனத்தை சேர்ந்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது. இது பொதுவாக யூரேசிய வேட்டை நாய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டைய இனம் முதன்முதலில் கிழக்கு ஆசியாவில் சுமார் 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை என்றும், இந்த இனம் சுமார் 8,00,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டது என்றும் யூகிக்கப்பட்டுள்ளது.

Also Read:   பாஜக எம்.எல்.ஏவை தெருவில் தேங்கியிருக்கும் கழிவு நீரில் நடக்க வைத்த தொகுதி மக்கள்!

டிமானிசியில் காணப்படும் அந்த எலும்புத் துண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கார்பன் டேட்டிங் மூலம், அவை நாயின் பற்கள் மற்றும் தாடையின் பிட்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் எலும்புகளை ஆய்வு செய்ததில், பண்டைய நாய் இறக்கும் போது அது இளம் வயதில் இருந்ததாகவும், சுமார் 30 கிலோகிராம் எடையைக் கொண்டிருந்ததையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் தொல்லியல் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதைபடிவ சான்றுகள் மூலம், பண்டைய நாய் இனங்கள் ஒரு கூட்டு பேக்-ஹண்டர் என்பது தெரியவந்துள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மற்ற பெரிய அளவிலான நாய்களைப் போலல்லாமல், இந்த நாய் இனம் அதன் குழுவில் உள்ள பிற நாய்கள் மற்றும் அதன் இனம் அல்லாத உயிரினங்களிடமும் சமூக அக்கறை கொண்டதாக இருந்தது என்று ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வின் மூலம், விஞ்ஞானிகளின் குழு நாயின் தோற்றத்தையும் கண்டறிந்தது. அவர்களைப் பொறுத்தவரை கிழக்கு ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு ஹைபர் மாமிச உணவு தான் இந்த நாய் இனம் என்று கணித்துள்ளனர்.

Also Read:  தண்ணீரை பளபளப்பான தங்கம் போன்ற உலோகமாக மாற்றிய ஆராய்ச்சியாளர்கள்: இது எப்படி சாத்தியம்?

ஆராய்ச்சிக்காக ஆய்வு செய்யப்பட்ட பண்டைய புதைபடிவமானது, காகசஸ் பிராந்தியத்தில் உள்ள Dmanisi-க்கு முதன்முதலில் வருகை தந்த நாய்களில் ஒன்று என்பதை ஆய்வு காட்டுகிறது. பண்டைய நாய் ஐரோப்பாவில் நுழைவதற்கான காலவரிசைக்கு இணையாக வரையறுக்கப்பட்டது. அதே நேரத்தில் ஹோமினின்ஸ் வகை ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு எதிர் திசையில் பயணித்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் மற்றும் வேட்டை நாய்கள் இரண்டும் டிமானிசியில் இருந்தது என்று ஆய்வில் பதிவு செய்யப்பட்டன. இது பழங்காலத்தில் உலகம் முழுவதும் தன் இன பரவலின் தொடக்கத்தைக் குறிக்கின்றன. மேலும் அந்த நாய் சமூகத்தின் மீது நிரூபிக்கப்பட்ட நற்பண்பு நடத்தை கொண்ட இரண்டு ஆரம்பகால ப்ளீஸ்டோசீன் பாலூட்டி இனங்கள் மட்டுமே என்று ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Published by:Arun
First published: