ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

உ.பி முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் காலமானார்!

உ.பி முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் காலமானார்!

முலாயம் சிங் யாதவ்

முலாயம் சிங் யாதவ்

82 வயதான முலாயம் சிங் யாதவிற்கு தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி நிறுவனரும் முலாயம் சிங் யாதவ் இன்று காலமானார். இந்த தகவலை அவரது மகன் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 82 வயதான முலாயம் சிங் யாதவிற்கு தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில்,குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார்.

  முலாயம் சிங் யாதவ் மறைவிற்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள், அக்கட்சி தொண்டர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.  சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவரான முலாயம் சிங் யாதவ், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை இருந்துள்ளார். அதேபோல் மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்துள்ள இவர், நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மிக சில நபர்களில் ஒருவர் என்ற பெருமையும் கொண்டுள்ளார். முலாயம் இதுவரை 10 முறை எம்எல்ஏவாகவும், 7 முறை எம்பியாகவும் வெற்றி பெற்றுள்ளார்.

  ஆகஸ்ட் மாதம் முதலே தீவிர உடல் நலக்குறைவுக்கு ஆளான முலாயம் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். கடந்த ஒர வாரமாகவே அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், மருத்துவமனையில் இன்று அவர் பிரிந்தது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Akilesh yadav, Mulayam Singh Yadav, Uttar pradesh