கொரோனா ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், முதல்வர் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால்
அமைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த
இயலாத நிலை உள்ளதாக அக்குழு தன்னுடைய பரிந்துரையை தெரிவித்துள்ளது.
மாணாக்கர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC)
மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கி,
மாணாக்கர்களுக்கும், (ME)
மாணாக்கர்களுக்கும்
இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
படிக்க: மார்ச் மாதத்தைவிட ஜூன் மாதத்தில் மும்மடங்காக அதிகரித்துள்ள மின்கட்டணம்- காரணம் என்ன?
படிக்க: செல்ல மகனிடம் அன்பை பொழியும் நடிகை ஏமி ஜாக்சன் - கியூட் புகைப்படங்கள்
படிக்க: த்ரிஷாவுடன் திருமணமா? நடிகர் சிம்பு தரப்பு விளக்கம்
இது குறித்த விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இறுதியாண்டு தவிர பிற ஆண்டு மாணர்களுக்கும், மருத்துவ படிப்பு மாணவர்களுக்கும் இந்த அறிவிப்பு இப்போது பொருந்தாது.
இந்த நிலையில், நியூஸ் 18-க்கு பிரத்யேக பேட்டியளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், இறுதியாண்டு மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இன்னும் பதில் வரவில்லை. பதில் வந்தவுடன் கல்வியாளர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: College, K.P.Anbazhakan