ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

காத்திருக்கும் ரூ.342 கோடி.. கோப்பை வெறியில் வீரர்கள்.. ஆர்வத்தில் ரசிகர்கள்.. FIFA உலக கோப்பை பைனல்!

காத்திருக்கும் ரூ.342 கோடி.. கோப்பை வெறியில் வீரர்கள்.. ஆர்வத்தில் ரசிகர்கள்.. FIFA உலக கோப்பை பைனல்!

உலக கோப்பை கால்பந்து கோப்பை

உலக கோப்பை கால்பந்து கோப்பை

Fifa World Cup final : பிரேசில், நெதர்லாந்து, போர்ச்சுகல், இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில், அந்த அணிகளுக்கு தலா ரூ.140 கோடி வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கத்தாரில் 22வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு இந்திய மதிப்பின்படி ரூ.342 கோடி பரிசு தொகையாக ஃபிபா வழங்குகிறது.

கால்பந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த FIFA உலக கோப்பையின் இறுதி போட்டி இன்று நடைபெற இருக்கிறது. கத்தாரில் கடந்த மாதம் 20ம் தேதி மிக பிரமாண்டமாய் தொடங்கிய இந்த தொடரில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினா அணியும் பலப்பரீச்சை நடத்தவுள்ளன.

இந்திய நேரப்படி 08.30 மணிக்கு லுசைல் ஐகானிக் மைதானத்தில் தொடங்க உள்ள இந்த போட்டியில் உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.342 கோடியும், தோல்வி அடையும் அணிக்கு ரூ.244 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. முன்னதாக, மூன்றாவது இடம் பிடித்த குரோஷியா அணிக்கு ரூ.223 கோடியும், நான்காம் இடம் பிடித்த மொராக்கொ அணிக்கு ரூ.206 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: இரண்டே நாட்களில் முடிந்த ஆஸி. – தெ.ஆப்பிரிக்கா டெஸ்ட் மேட்ச்… ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்…

பிரேசில், நெதர்லாந்து, போர்ச்சுகல், இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில், அந்த அணிகளுக்கு தலா ரூ.140 கோடி வழங்கப்படும். அதேபோல், 2வது சுற்றுக்கு தகுதிபெற்ற அமெரிக்கா, செனகல், ஆஸ்திரேலியா, போலந்து, ஸ்பெயின், ஜப்பான், சுவிட்சர்லாந்து, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு தலா ரூ.107 கோடி ஃபிபா வழங்கவுள்ளது.

First published:

Tags: FIFA World Cup 2022