ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

கால்பந்து ஃபைனல் பார்க்க ரெடியா? எங்கு பார்க்கலாம்? எப்படி பார்க்கலாம்? இதோ விவரம்!

கால்பந்து ஃபைனல் பார்க்க ரெடியா? எங்கு பார்க்கலாம்? எப்படி பார்க்கலாம்? இதோ விவரம்!

ஜியோ சினிமா ஆப்

ஜியோ சினிமா ஆப்

FIFA world cup 2022: வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பார்த்து கொண்டாடலாம். ஸ்மார்ட்போன், லேப்டார், டேப், டிவியில் லைவ் பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் எனப் பெரும் எதிர்பார்ப்பு. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் மோத உள்ளன.உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி யுத்தம் இன்று இரவு களைகட்டவுள்ளது. போட்டி என்னமோ அர்ஜெண்டினா - பிரான்ஸ் அணிகளுக்கு இருந்தாலும் மெஸ்ஸியா அல்லது எம்பாப்பேவா என ரசிகர்கள் மோத தயாராகியுள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் போட்டியைக் காண ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இரு அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளனர். இந்த போட்டியை நாம் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பார்த்து கொண்டாடலாம். ஸ்மார்ட்போன், லேப்டார், டேப், டிவியில் லைவ் பார்க்கலாம்.

ஜியோ சினிமா ஆப், ஸ்போர்ட்ஸ் 18, டாடா ப்ளே, விஐ டிவி மூலம் உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியை நேரலையில் பார்க்கலாம். ஜியோ சினிமா ஆப் (JioCinema app) மூலம் இறுதிப் போட்டியை நேரலையில் பார்க்கலாம். இந்த ஆப் உங்கள் போன், டேப்லெட், கணினி, ஸ்மார்ட் டிவி-யிலும் டவுன்லோடு செய்து பார்க்கலாம்.

கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்து தமிழ், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு இந்திய மொழிகளில் 4K தரத்துடன் பார்க்கலாம். அதேபோல் கேபிள்/டி.டி.எச் (TV/DTH) இணைப்பு மூலமும் இறுதிப்போட்டியை காணலாம். ஸ்போர்ட்ஸ் 18 (1) மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 கேல் சேனல்களில் போட்டியை நேரலையில் காணலாம்.

First published:

Tags: FIFA World Cup 2022, Jio