83 வெறும் நம்பர்தான்!... -அம்ரீந்தர் சிங் பேத்தியின் திருமணத்தில் நடனமாடிய ஃபரூக் அப்துல்லா

ஃபரூக் அப்துல்லா, அம்ரிந்தர் சிங்

1960 களில் வெளியான பாடல்களுக்கு ஃபரூக் அப்துல்லா லிப் ஸிங் செய்த படியே நடனமாடினார்.

 • Share this:
  பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் பேத்தியின் திருமண விழா சமீபத்தில் நடைபெற்றது. அம்ரீந்தர் சிங் பேத்தி சாஹிந்தர் கவுர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அதித்யாவை மணந்தார். இந்த விழாவுக்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தனர்களாக கலந்துக்கொண்டனர்.

  இவ்விழாவில் ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவும் கலந்துக்கொண்டார். திருமண விழாவில் பாலிவுட் பாடலுக்கு 83 வயதான ஃபரூக் அப்துல்லா நடன மாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

     1960 களில் வெளியான பாடல்களுக்கு ஃபரூக் அப்துல்லா லிப் ஸிங் செய்த படியே நடனமாடினார். அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கை அழைத்து நடனமாட வைத்தார். இருவரும் நடனமாடுவதை கண்டு அங்கிருந்தவர்கள் கைகளை தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஃபரூக் அப்துல்லா நடனமாடும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சாரல் படேல் “ இந்த வீடியோவை பார்க்கும்போது வயது என்பது வெறும் நம்பர்தான்” என பதிவிட்டு உமர் அப்துல்லாவை குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: