புதுச்சேரி வில்லியனூர்பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்த பிரபல ரவுடி அருணுக்கும் வழூதாவுரை சேர்ந்த ரவுடி முரளிக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் உச்சமாக நேற்று மதியம் 3 மணிக்கு அருணை கொல்ல திட்டமிட்ட முரளி, தனது கூட்டாளிகள் 5 பேருடன் அருண் வழக்கமாக இருக்கும் பிள்ளையார் குப்பம் பாலத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு இருந்த அருண் மீது இரு நாட்டு வெடி குண்டுகளை வீசியுள்ளனர். இதில் லேசான காயமடைந்த அருண் ஊருக்குள் ஓட துவங்கினார். அவரை விரட்டி கொண்டு ஓடி வந்த கொலை கும்பலை ஊருக்குள் இருந்த அருண் ஆதாரவாளர்கள் எதிர் கொண்டு வந்து தாக்க முற்பட்டனர்.
இதில் பயந்த கும்பல் தப்பி ஓடியது. ஆனால் ரவுடி முரளியும் கொடாத்தூர் சந்துருவும் சிக்கி கொண்டனர். அவர்கள் இருவரையும் பிரபல ரவுடி அருண் மரக்கடையால் கொடூரமாக அடித்தே கொன்று விட்டு தப்பி ஓடினான்.
இத்தகவல் அறிந்து வில்லியனூர் போலீசார் பிணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நகர பகுதியில் ஒரு ரவுடியை மற்றொரு ரவுடி கும்பல் கொன்றதை தொடர்ந்து ரவுடிகளுக்குள் மோதல் மற்றும் கொலை என்பது ஒரே வாரத்தில் இது இரண்டாவது சம்பவம் என்பது குறிப்பிட தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.