புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில் அம்மாநிலம் மீண்டும் தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் கூட்டணிக்கும், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே போட்டி அமைந்தது. காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ கட்சிகள் இடம்பெற்றுள்ளன. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் பாஜகவும் அ.தி.மு.க.வும் உள்ளன. ஏப்ரல் 16-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடந்தது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மாலை இறுதிகட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர், இரவு 7 மணி முதல் தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகளை வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி 5 மாநிலங்களுக்கான தேர்தல் கருத்து கணிப்புகள வெளியாகி வருகிறது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியமையும் என ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு 16 - 20 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக -காங்கிரஸ் கூட்டணி 11 -13 இடங்களை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.