முகப்பு /செய்தி /Breaking and Live Updates / ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற நிலை வந்து விட்டதால் அமைச்சர்கள் வீதி வீதியாக சுற்றுகின்றனர்: ஈபிஎஸ் விமர்சனம்

ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற நிலை வந்து விட்டதால் அமைச்சர்கள் வீதி வீதியாக சுற்றுகின்றனர்: ஈபிஎஸ் விமர்சனம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈபிஎஸ் பிரச்சாரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈபிஎஸ் பிரச்சாரம்

Eps in Erode East | ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் அமைச்சர்கள் மக்களின் குறைகளை கேட்கவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈரோடு பெரியவலசு நான்கு ரோடு, வீரப்பன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், 21 மாத கால ஆட்சியில் எதுவும் திமுக அரசு எதையும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர்கள் புரோட்டா போட்டும், டீ போட்டும் பிரச்சாரம் செய்துவருவதாகவும் மக்களுக்கு நல்லது செய்யதான் அமைச்சராக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற நிலை வந்து விட்டதால் தான், அமைச்சர்கள் வீதி வீதியாக சுற்றுவதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

First published:

Tags: EPS, Erode East Constituency