புதுச்சேரி காட்டேரிகுப்பம் கிராமம் திரோபதி அம்மன் கோயில் வீதியில் வசிப்பவர் ஜெயகுமார். டிராவஸ் உரிமையாளர். இவரது மனைவி கலா. அழகு கலை நிபுணரான இவர் வீட்டிலேயே பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 90 நாட்களாய் பியூட்டி பார்லரை நடத்த முடியாமல் உள்ளார். தனது வருமானமும் பாதிக்கப்பட்டிருப்பதுடன் தனது கணவருக்கு டிராவல்ஸ் தொழிலில் வருமானம் இல்லாததால் கஷ்டப்பட்டு வந்தனர்.
4 மாதங்கள் தாண்டியும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. தங்களது தொழில் மீண்டும் துவங்குவதற்கான காலமும் தெரியவில்லை. இதனால் பிரியாணி கடையை திறக்க கலா திட்டமிட்டு கணவர் ஜெயக்குமாரிடம் கூறினார்.
அவரும் ஆலோசனையை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார். தற்போது கொரோனாவினால் சுய தொழிலை இழந்த தம்பதியரை மனம் தளராமல் பிரியாணி கடையை திறந்து மகிழ்வுடன் மாற்று தொழிலுக்கு மாறியுள்ளனர்.
ஒரு உணவகம் திறக்க வேண்டும் என்பது தனது கனவாக இருந்தது. தற்போது கொரோனா தனது கனவை நினைவாக்கி உள்ளதாக மகிழ்வுடன் தெரிவிக்கிறார் இந்த அழகு கலை நிபுணர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.