ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

“திராவிட மாடல், பெரியார், அண்ணா...” வார்த்தையை படிக்காமல் தவிர்த்த ஆளுநர்...!

“திராவிட மாடல், பெரியார், அண்ணா...” வார்த்தையை படிக்காமல் தவிர்த்த ஆளுநர்...!

திராவிட மாடல்

திராவிட மாடல்

திராவிட மாடல் ஆட்சியை அரசு வழங்குகிறது என்ற வார்த்தையை ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் தவிர்த்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு அரசை திராவிட மாடல் அரசு என்றே அனைத்து இடங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்பட அமைச்சர்கள் அனைவரும் அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டபோது அதில் திராவிட மாடல் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. ஆனால், ஆளுநர் உரை வாசிக்கும்போது திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்துவிட்டார்.

ஆளுநர் உரை தமிழாக்கத்தின் 47வது பக்கத்தில், “தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி பார் போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகிறது” என்ற பத்தி இடம்பெற்றிருந்தது. ஆனால், அதனை தவிர்த்துவிட்டு மற்ற பத்திகளை வாசித்தார் ஆளுநர்.

First published:

Tags: RN Ravi, TN Assembly