முகப்பு /செய்தி /Breaking and Live Updates / திமுக மாவட்ட பொறுப்பாளருக்கான தேர்தல்: வேட்புமனு தாக்கல் தேதி அறிவிப்பு

திமுக மாவட்ட பொறுப்பாளருக்கான தேர்தல்: வேட்புமனு தாக்கல் தேதி அறிவிப்பு

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

5ம் தேதி சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட  16 மாவட்டத்தினரும் மனுத்தாக்கல்  செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திமுக மாவட்ட பொறுப்பாளர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல்,வரும் 22ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிவடைகிறது.

திமுகவில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் அவைத்தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள், தலைமைக்குழு செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுபினர்களுக்கு, மாவட்ட தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. 22ம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 19 மாவட்டத்தினர் மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

23ம் தேதி நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 21 மாவட்டத்தினர் வேட்பு மனு அளிக்கலாம். 24ம் தேதி 16 மாவட்டத்தினரும், 25ம் தேதி சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட  16 மாவட்டத்தினரும் மனுத்தாக்கல்  செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பப்படிவம் பெற்றுக் கொள்ளலாம் என்றும், விண்ணப்பம் ஒன்றுக்கு 25 ஆயிரம் கட்டணமாக செலுத்தி ரசீது பெறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: DMK, Election, Political party