வேட்புமனுவை வாபஸ் பெற்றார் திமுக வேட்பாளர் என்.ஆர். இளங்கோ

News18 Tamil
Updated: July 10, 2019, 11:17 AM IST
வேட்புமனுவை வாபஸ் பெற்றார் திமுக வேட்பாளர் என்.ஆர். இளங்கோ
என்.ஆர். இளங்கோ
News18 Tamil
Updated: July 10, 2019, 11:17 AM IST
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வைகோவின் மனு ஏற்கபட்டதால், மாற்று வேட்பாளராக நிறுத்தப்பட்ட என்.ஆர். இளங்கோ தனது மனுவை வாபஸ் பெற்றார்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.

அதன்படி, திமுக வேட்பாளர்கள் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகிய இருவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.


எனினும், வைகோவுக்கு தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீடு செய்யப்போவதாக வைகோ மனுத்தாக்கல் செய்ததை அடுத்து, அவரது தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால்,  வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், அவருக்கு பதிலாக திமுகவின் என்.ஆர் இளங்கோ போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், வைகோவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால், என்.ஆர் இளங்கோ தனது வேட்புமனுவை இன்று வாபஸ் பெற்றார்.

Loading...

First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...