தீபிகா படுகோன் நடித்திருக்கும் ஹெகரியான் திரைப்படம் இன்று ஓடிடி யில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் முத்தக் காட்சிகள் அதிகம் இருப்பதால் இதனை திரையரங்குக்கு பதில் ஓடிடியில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் பிரமோஷனின் போது, தீபிகா படுகோனிடம், முத்தக் காட்சியில் நடிக்க கணவரிடம் அனுமதி வாங்குகிறீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் தயங்காமர் பளீரென்று பதிலளித்துதுள்ளார் தீபிகா.
இந்தியில் லிப்-லாக் காட்சிகள் சாதாரணம். வழக்கமான கமர்சியல் திரைப்படங்களிலேயே இவை காணப்படும். ஹெகரியான் அடல்ட் கன்டென்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் லிப்லாக் காட்சி இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இந்தத் திரைப்படத்தில் தீபிகா படுகோனும், அனன்யா பான்டேயும் ஒன்றுவிட்ட சகோதரிகளாக வருகின்றனர். இருவருக்கும் பாய்பிரண்ட் இருக்கிறார்கள். ஒருமுறை இவர்கள் தங்களின் கடற்கரையோர சொகுசு பங்களாவில் விடுமுறையை கழிக்கையில் தீபிகா படுகோனுக்கு அனன்யா பாண்டியனின் பாய் பிரெண்ட் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. இதைச் சுற்றி இந்த கதை பின்னப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் தீபிகாவுக்கும் சித்தந்த் சதுர்வேதிக்கும் லிப் லாக் காட்சிகள் உள்ளன. இந்தக் காட்சியில் நடிக்க உங்கள் கணவர் ரன்வீர் சிங்கிடம் அனுமதி வாங்கினீர்களா என்று தீபிகாவிடம்கேட்கப்பட்டது. காரணம், இந்தப் படத்தின் டிரைலர் வெளியான போது முத்தக் காட்சிகளை வைத்து தீபிகா படுகோனை பலரும் விமர்சித்து இருந்தனர்.
Also read... செல்வராகவன் படத்தில் தனுஷின் அட்டகாசமான இரு தோற்றங்கள்...!
அதற்கு பதிலளித்த தீபிகா படுகோன், இதுமாதிரியான முட்டாள்தனமான கமென்ட்களை நானோ ரன்வீரோ கண்டுகொள்வதில்லை. ரன்வீர் இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. எனது நடிப்பை அவர் ரசிப்பார். இந்தப் படத்திலும் என்னுடைய நடிப்பை பார்த்து ரன்வீர்சிங் ரசிப்பார் என பதிலடி கொடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.