ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

பிரபல இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில் முதலிடத்தில் தனுஷ்... இடம் பிடிக்காத விஜய்-அஜித்!

பிரபல இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில் முதலிடத்தில் தனுஷ்... இடம் பிடிக்காத விஜய்-அஜித்!

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

இந்தப் பட்டியலில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய்யின் பெயர்கள் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • tamil nad, India

பிரபல திரைப்பட ரேட்டிங் இணையதளமான IMDb 2022-ஆம் ஆண்டின் பிரபலமான இந்திய நட்சத்திரங்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது.

IMDb என்பது உலகம் முழுவதும் வெளியாகும் படங்களின் தரத்தை மதிப்பிடும் இணையதளம். இந்த ஆண்டு மிகவும் பிரபலமான டாப் 10 இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை இந்த தளம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார். IMDb தளத்தில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தனுஷ் முதலிடத்தில் இருப்பதற்குக் காரணம், இந்த ஆண்டு அவருக்கு 4 படங்கள் வெளியாகியது தான். குறிப்பாக அவர் நடித்த கிரே மேன் என்ற ஹாலிவுட் படமும் இந்த ஆண்டு தான் வெளியானது. இது தவிர மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என மூன்று தமிழ் படங்கள் வெளியாகின.

இந்தப் பட்டியலில் பாலிவுட் நடிகைகள் அலியா பட் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முறையே, 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக RRR படத்தின் ஹீரோ ராம்சரண் 4வது இடத்திலும், நடிகை சமந்தா 5வது இடத்திலும் உள்ளனர். பாலிவுட் நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி முறையே 6 மற்றும் 7-வது இடத்தைப் பிடித்துள்ளனர். தெலுங்கு நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜுன் முறையே 8வது மற்றும் 9வது இடத்தில் உள்ளனர். கன்னட நடிகர் யாஷ் 10-வது இடம் பிடித்துள்ளார்.

கே.ஜி.எப் நடிகர் கிருஷ்ணா ஜி ராவ் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்தப் பட்டியலில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய்யின் பெயர்கள் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Actor dhanush, Actor Thalapathy Vijay, Actress Samantha, YearEnder 2022