• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • களையிழந்த புரட்டாசி முதல் சனிக்கிழமை.. பக்தர்கள் ஏமாற்றம்..

களையிழந்த புரட்டாசி முதல் சனிக்கிழமை.. பக்தர்கள் ஏமாற்றம்..

புரட்டாசி

புரட்டாசி

வார இறுதி நாட்களான வெள்ளி, சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டத்தை தடுக்கும் வகையில், கோயில்களில் பக்தர்களுக்கு அரசு அனுமதி இல்லை.

  • Share this:
    புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று கொரோனா விதிகளின்படி கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசியில் பக்தர்கள் அதிகளவில் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். அதிலும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் கூட்டம் நிரம்பி வழியும்.

    கடந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலன கோயில்கள் மூடப்பட்ட நிலையில் இந்தாண்டும் கொரோனா விதிகள் அமலில் உள்ளன. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டத்தை தடுக்கும் வகையில், கோயில்களில் பக்தர்களுக்கு அரசு அனுமதி மறுத்துள்ளது.

    இந்த சூழலில் சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோயில் பூட்டப்பட்டுள்ளது. அங்கு தரிசிக்க வந்த பக்தர்கள் பூட்டிய கோயில் முன்பு கோவிந்தா கோஷம் எழுப்பி வழிபட்டனர். கோயில்கள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தடைகளை மீறி குவிந்த பக்தர்களை போலீசார் கலைந்து போகும்படி அறிவுறுத்தினர்.

    Also Read: சென்னை வரும் சொகுசு சுற்றுலா கப்பல்.. சிறப்புகள் என்ன?

    வழக்கமாக புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில் ,கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே நேரில் சென்று ஏழுமலையானை வழிபட்டனர். 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுக்கள் மற்றும் இலவச தரிசன டோக்கன்கள் என 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே கோயில் நிர்வாகம் அனுமதி அளிக்கிறது.இதன் காரணமாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக புரட்டாசி முதல் சனிக்கிழமை களையிழந்து காணப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: