கன்னியாகுமரிக்கு கிழக்கு வட கிழக்கே சுமார் 1120km தொலைவில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி (low Pressure Area) இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (depression) மாறியுள்ளது எனவும், இது இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாகவும் நாளை(01) காலை புயலாகவும் மாற கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் திரிகோணமலையிலிருந்து 710 கிமீ, கன்னியாகுமரி 1120 கிமீ தொலைவில் உள்ளது. இப்புயல் சின்னம் இலங்கையின் மைய பகுதியில் கரை கடந்து பின்னர் மன்னார் குடாவிற்குள் நுழைய வாய்ப்பு உள்ளது இந்த புயலின் காரணமாக டிசம்பர் 1-ம் தேதி - தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2-ம் தேதி - தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரிமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.
டிசம்பர் 3-ம் தேதி - தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரிமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுக எச்சரிக்கை:
இதன் காரணமாக கடலூர் உள்ளூர் தமிழகத்தின் அனைத்து துறைமுகங்களில் புயல் தூர முன்னறிவிப்பு கொடி எண் 1 ( Distant warning 1) ஏற்றிட அறிவிப்பு பெறப்பட்டுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.