மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரியின் அலுவலகம் சூறையாடல்!

மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரியின் அலுவலகம் சூறையாடல்!
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
  • Share this:
டெல்லியில் உள்ள மக்களவை காங்கிரஸ் குழு தலைவருமான அதிர் ரஞ்சன் சவுத்ரியின் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது.

டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க கோரி அதிர் ரஞ்சன் சவுத்திரி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள அதிர் ரஞ்சன் சவுத்ரியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திவிட்டு 4 பேர் கொண்ட கும்பல் தப்பிச் சென்றுவிட்டதாக அவரது தனிப்பட்ட செயலாளர் ராஜ்பண்டித் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.


இதைத் தொடர்ந்து அதிர் ரஞ்சன் சவுத்ரியின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Also see...
First published: March 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading