Cyclone Nivar: நிவர் புயலால் என்ன பாதிப்பு ஏற்படும்? எந்த மாவட்டங்களில் சேதம் இருக்கும்?
Cyclone Nivar Damage சென்னையில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாயும் எனவும், கிளைகள் முறிந்து விழக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கோப்பு
- News18 Tamil
- Last Updated: November 25, 2020, 7:32 PM IST
நிவர் புயல் கரையை கடக்கும் போது வட கடலோர மாவட்டங்களில் எந்தமாதரியான சேதங்கள் ஏற்படக்கூடும் என்பதுதான் எல்லோரின் கேள்வியாக இருக்கும்.
நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது. அப்போது, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்படும். அங்கு விநாடிக்கு 140 கிமீ காற்று வீசக்கூடும் என்பதால் குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
சில இடங்களில் பழைய ஓட்டு வீடுகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக தெரிவித்து உள்ளது. மின்கம்பங்கள் மற்றும் தொலைதொடர்பு கம்பங்கள் பலத்த காற்றால் சேதமடைய வாய்ப்பு இருப்பதாவும், மின்வெட்டு மற்றும் தொலைதொடர்பு துண்டிப்பு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. மின்சாரத்தில் இயங்கக்கூடிய ரயில் சேவைகளில் பெருமளவு பாதிப்பு ஏற்படும். சிக்னல் கம்பங்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விளைநிலங்களில் பயிர்கள் பெருமளவு சேதம் ஏற்படும். தென்னை, பனை மற்றும் மாங்காய் மரங்கள் சூறைக்காற்றில் முறிந்து விழும் வாய்ப்பு உள்ளது.
நாட்டுப் படகுகள், சிறிய வகை படகுகள் ராட்சத கடல் அலையில் சிக்கி சேதமடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் நிவர் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாயும் எனவும், கிளைகள் முறிந்து விழக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வாழை, பப்பாளி மரங்கள் மற்றும் பயிர்கள் பலத்த சேதமடையும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழை, புயல் செய்திகளுக்கு இணைந்திருங்கள்
நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது. அப்போது, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்படும். அங்கு விநாடிக்கு 140 கிமீ காற்று வீசக்கூடும் என்பதால் குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
சில இடங்களில் பழைய ஓட்டு வீடுகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக தெரிவித்து உள்ளது. மின்கம்பங்கள் மற்றும் தொலைதொடர்பு கம்பங்கள் பலத்த காற்றால் சேதமடைய வாய்ப்பு இருப்பதாவும், மின்வெட்டு மற்றும் தொலைதொடர்பு துண்டிப்பு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.