கோவை அருகே டாஸ்மாக் கடை திறந்ததும் கைதட்டி, விசிலடித்து கொண்டாடிய குடிமகன்கள்...!

கோவை அருகே இன்று காலை டாஸ்மாக் மதுபானக் கடை திறந்ததும், வரிசையில் காத்திருந்த குடிமகன்கள் கைதட்டி, விசிலடித்து கொண்டாடினர்.

கோவை அருகே டாஸ்மாக் கடை திறந்ததும் கைதட்டி, விசிலடித்து கொண்டாடிய குடிமகன்கள்...!
கைதட்டிய குடிமகன்கள்
  • News18
  • Last Updated: May 7, 2020, 12:38 PM IST
  • Share this:
கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, காலை 10 மணிக்கு விற்பனை தொடங்கியது. எனினும், சில இடங்களில் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே விற்பனை தொடங்கப்பட்டது.

நீண்ட வரிசையில் காத்திருந்து குடிமகன்கள் மதுவை வாங்கிச்சென்றனர். ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு மதுபாட்டில்கள் வழங்கப்படும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.


44 நாட்களுக்குப் பிறகு மது பாட்டில்களை வாங்கிய குடிமகன்கள் மகிழ்ச்சியுடன் வெளியேறினர். ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை காட்டினாலே மது பாட்டில்கள் வழங்கப்படுகின்றன.

டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டாலும், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைக்குள் வரும் பகுதிகளில் கடைகள் திறக்கப்படாது.

கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம் பகுதியில் உள்ள மதுபானக்கடையில் மது வாங்க கூட்டம் காலை முதலே, அலை மோதியது.நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் காத்திருந்தனர்.முகக் கவசம் அணிந்து குடைகளுடன் வந்த மதுப்பிரியர்கள் தண்ணீர் பாட்டில்களுடன் வரிசையில் நின்றனர். வெயில் அதிகமாக இருந்ததால் வரிசையில் குடை, காலி பாட்டில்களை வைத்து இடம் பிடித்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து மது பிரியர்கள் மது வாங்கி சென்றனர்.

44  நாட்களுக்கு பிறகு மதுபானக்கடை திறந்த போது, கைத்தட்டி விசிலடித்து மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

படிக்க: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை விபரங்கள் வெளியீடு - முழு பட்டியல்


First published: May 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading