கொரோனா அச்சம் - சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை யாரும் சீண்டாத நிலை
"மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் நகரில் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த நகரம் ஹாட்ஸ்பாட் ஆக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது"

News 18
- News18
- Last Updated: April 17, 2020, 8:29 AM IST
கொரோனா அச்சம் காரணமாக சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை யாரும் எடுக்க முயற்சிக்காத சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பரிசோதனைகள் வேகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை தகவல்களின்படி, இந்தியாவில் தற்போது வரை 12,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1514 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 420 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்றிரவு வரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலங்கள் வாரியாக பார்க்கையில், மஹாராஷ்டிராவில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கு 3200-ஐ கடந்துள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ள டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் நேற்று மிகக்குறைவான புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதே நேரத்தில், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தானிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது.
மத்தியப்பிரதேசத்தில் மட்டும் 938 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 53 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் நகரில் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த நகரம் ஹாட்ஸ்பாட் ஆக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், இந்தூர் நகரில் சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை கொரோனா அச்சத்தால், யாரும் தொடக் கூட முயற்சிக்காத சம்பவம் நடந்துள்ளது. ஹிரா நகர் பகுதியில் உள்ள பிரதான சாலையில், 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்துள்ளன.
பலர் அப்பகுதி வழியே கடந்து சென்றாலும் கொரோனா அச்சத்தால் யாரும் ரூபாயை தொடக் கூட முயற்சிக்கவில்லை. இது தொடர்பாக தகவல் அறிந்து சென்ற போலீசார், கையுறை அணிந்து ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர். மொத்தம் ரூ.6480 கிடந்துள்ளது.
“சாலையில் இருந்து எடுத்த பணத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை. பணத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தியுள்ளோம். சிசிடிவி கேமரா மூலம் இந்த பணத்தை யாரும் தவற விட்டார்களா அல்லது வேண்டுமென்றே வீசினார்களா என்பதை கண்டறிய உள்ளோம்” என்று போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வழியாகவும் கொரோனா வைரஸ் பரவும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பரிசோதனைகள் வேகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை தகவல்களின்படி, இந்தியாவில் தற்போது வரை 12,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1514 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 420 ஆக அதிகரித்துள்ளது.