• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியைச் சொல்லக் கூடாதா?- பிடிவியிலிருந்து ஷோயப் அக்தர் நீக்கம்

பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியைச் சொல்லக் கூடாதா?- பிடிவியிலிருந்து ஷோயப் அக்தர் நீக்கம்

ஷோயப் அக்தர்

ஷோயப் அக்தர்

  • Share this:
    பாகிஸ்தான் தேசியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அக்தருக்கும் டாக்டர் நவ்மான் நியாஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து இவர்கள் இருவரையுமே நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலிருந்து வெளியேற்றியது பாகிஸ்தான் தேசியத் தொலைக்காட்சியான பிடிவி.

    டாக்டர் நவ்மான் நியாஸ் அக்தரை வெளியேறுமாறு கோரினார், இதனையடுத்து அக்தர் வெளியேறினார். நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறினார் அகதர். ஆனால் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பிடிவி அக்தரையும் நவ்மான் நியாஸ் இருவரையுமே பாகிஸ்தான் டிவியிலிருந்து நீக்கியுள்ளது கண்டு அக்தர் அதிர்ச்சியடைந்தார்.

    பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டியில் பாகிஸ்தான் வெற்றிக்குப் பிறகு நடத்தப்பட்ட லைவ் நிகழ்ச்சியில் பிடிவி ஜர்னலிஸ்ட் நவ்மான் நியாஸ், பாகிஸ்தான் பவுலர்கள் ஷாகின் அப்ரீடி, மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோரின் எழுச்சி பற்றிய விவாதத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான லாகூர் குவாலாண்டர்ஸ் அணியில் ஆடியதுதான் என்று அக்தர் கூறினார்.

    இது ஏதோ தனியார் அணிக்கும் உரிமையாளருக்கும் சப்போர்ட் செய்வது போல் தெரிய நவ்மான் நியாஸ், அக்தரிடம், “நீங்கள் கொஞ்சம் அகராதித்தனமாகப் பேசுகிறீர்கள். நான் இதைச் சொல்ல விரும்பவில்லை, ஆனால் உங்களை நீங்கள் ஸ்மார்ட் என்று நினைத்துக் கொண்டிருந்தால் நீங்கள் போகலாம், நான் இதை லைவ் நிகழ்ச்சியில் அனைவரின் முன்னிலையில்தான் கூறுகிறேன்” என்றார்.

    இதே நிகழ்ச்சியில் இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் கோவர், லெஜண்ட் விவ் ரிச்சர்ட்ஸ் இருந்தனர், இவர்கள் முன்னிலையில் தன்னை நியாஸ் அவமானப்படுத்தியதாகக் கருதிய அக்தர், “இது பெரிய ஜோக், நான் இந்நாட்டு மக்கள் முன்னிலையில் வெளியேறினேன், உலக பார்வையாளர்கள் முன்னிலையில் வெளியேறினேன். பிடிவிக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்ன? என்னை நீக்க அவர்கள் யார்?” என்று கொதித்துப் போயுள்ளார்.

    ஷோயப் அக்தருக்கு பொதுவெளியில் பேசும் முறை அத்துப்படியல்ல. அவர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு தன் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி விடும் டைப். இதனால் பல இடங்களில் அவர் வகையாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார். இது அந்த வகையில் ஒரு சம்பவம். அவருக்கு இதெல்லாம் பழக்கமாகியிருக்கும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: