’இந்து என்பதை மக்கள் ஏற்று கொண்டிருக்கிறார்கள். எனவே இந்து மதத்தை எதிர்த்தால் அது நமக்கே விரோதமாக அமையும்’ என்று சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சமூக நல்லிணிக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், இதுதொடர்பாக நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சிக்கு சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார். தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வனின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசினார்.
அப்போது பாலகிருஷ்ணன் பேசுகையில், ’திமுக, காங்கிரஸ் என கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் தனித்தனியாக கொள்ளைகள் இருக்கின்றன. கூட்டணி கட்சிகள் என்பதாலேயே எல்லாரும் ஒரே கருத்து, கொள்கைகள் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் இன்றைக்கு இந்துத்துவா என்பதை எதிர்த்துப்போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த கருத்துடன் உடன்பாடுள்ளவர்களுடன் இணைந்துதான் போராடுகிறோம்’ என்றார்.
அதே நேரம் இது இந்துங்களுக்கு எதிரான போராட்டம் இல்லை. மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் இந்து மதம் பற்றிய விவாதமே தேவையில்லை’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்து மதத்தை எதிர்த்தால் அது நமக்கே விரோதமாக அமையும். மற்ற மதங்களுக்கு மட்டுமல்ல. இந்துத்துவா இந்துங்களுக்குமே எதிரானதுதான். உதாரணத்திற்கு காந்தியை கொன்றதும் ஒரு இந்துத்துவா அமைப்புதான். எனவே நாம் இப்போது போராட வேண்டியது இந்துத்வா என்ற மதவெறி அமைப்பை எதிர்த்துதான் என்றும் அவர் பேசியுள்ளார்.
இதுதொடர்பான விரிவான பேட்டியை இன்று மாலை 5 மணிக்கு நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.