ஹோம் /நியூஸ் /சற்றுமுன் /

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆதார் ஃபார்முலா - மத்திய அரசின் புதிய மூவ்!

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆதார் ஃபார்முலா - மத்திய அரசின் புதிய மூவ்!

கொரோனா வந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை : இதுவும் தவறாக பரவும் தகவல்தான். இப்படி எந்த தகவலும் மருத்துவர்கள் அல்லது ஆய்வாளர்கள் மூலம் வரவில்லை. அவ்வாறு கொரோனா வந்தவர்கள்தான் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்ததால்தான் கொரோனா எளிதில் தொற்றிக்கொண்டது. எனவே கொரோனா வந்து குணமடைந்தவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மருத்துவரின் ஆலோசனைப் பெற்று உரிய நேரத்தில் செலுத்திக்கொள்வது நல்லது.

கொரோனா வந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை : இதுவும் தவறாக பரவும் தகவல்தான். இப்படி எந்த தகவலும் மருத்துவர்கள் அல்லது ஆய்வாளர்கள் மூலம் வரவில்லை. அவ்வாறு கொரோனா வந்தவர்கள்தான் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்ததால்தான் கொரோனா எளிதில் தொற்றிக்கொண்டது. எனவே கொரோனா வந்து குணமடைந்தவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மருத்துவரின் ஆலோசனைப் பெற்று உரிய நேரத்தில் செலுத்திக்கொள்வது நல்லது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு கைரேகை பதிவு மற்றும் கருவிழி ஸ்கேன் தேவைப்படுகிறது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

எதிர்பாராமல் பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்த, ஆதாருக்கு பயன்படுத்தப்பட்ட முகத்தை ஸ்கேன் செய்து அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் நிலையில் மத்திய அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு கைரேகை பதிவு மற்றும் கருவிழி ஸ்கேன் தேவைப்படுகிறது. அவ்வாறு கைகளை ஸ்கேன் செய்யும்போது கொரோனா பரவ வாய்ப்புள்ளதால், மாற்று திட்டத்தை முன்னெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பேசிய தேசிய சுகாதார ஆணையர் ஆர்.எஸ்.ஷர்மா, தடுப்பூசிக்காக கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்வதை தவிர்த்து, ஆதாருக்கு முகத்தை ஸ்கேன் செய்த அதே நடைமுறையை பின்பற்ற உள்ளதாக கூறியுள்ளார். எதிர்பாராமல் பரவும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் முன்னெடுத்துள்ளதாகவும் ஆர்.எஸ்.ஷர்மா விளக்கமளித்துள்ளார். இதற்கு முன்னார் ஆதார் திட்டத்தின் இயக்குநர் பொறுப்பில் அவர் இருந்ததால், தற்போது கொரோனா சோதனைக்கு ஆதார் தகவல்களை பயன்படுத்தும் முடிவை அவர் எடுத்துள்ளார். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், தொடர்பு இல்லாமல் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா முக்கிய இடத்தை பெறும் என்றும் ஷர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முகத்தை ஸ்கேன் செய்தல்

தற்போது கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்யப்படுகிறது. புதிய திட்டத்தின்படி, ஆரோக்கிய சேது செயலியில் உள்ள கோ வின் (Co-WIN) தளத்தில் தடுப்பூசி செலுத்த விரும்புவோர் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது, தங்களுடைய செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணைஅந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும். தடுப்பூசி மையத்துக்கு செல்லும் நபர், தங்களுடைய ஆதார் தகவல்கள் மூலம் தாங்களே சரிபார்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார். பின்னர் அவருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இந்த திட்டத்தில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எதிர்பாராமல் கொரோனா வைரஸ் பரவுவது பெருமளவு தடுக்கப்படும் என ஆர்.எஸ்.ஷர்மா தெரிவித்துள்ளார்.

புதிய திட்டத்தின் நன்மைகள்

கொரோனா வைரஸ் பாதித்தவருடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதிகளவு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இதனையொட்டியே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆதார் தகவல்கள் மூலம் முகத்தை வைத்து அடையாளம் காணும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தடுப்பூசி மையத்தில் ஒருவருடன் நேரடி தொடர்பில் இருக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போகும். குறிப்பாக, கைரேகை பதிவு செய்யும்போது பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. முகத்தை வைத்து அடையாளம் காண்பது நடைமுறைக்கு வந்தால், அதற்கு வாய்ப்பு இல்லாமல் போகும். மேலும், தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கான அடையாள சான்றையும் இணைய வழியில் கொடுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Also read... Explainer: நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்றால் என்ன? காலநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு இந்தியா தெரிவிக்கும் ஆட்சேபனைகள் என்ன?

தனிநபர் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

தடுப்பூசி எடுத்துக்கொள்வோரை ஆதார் தகவல்கள் மூலம் முகத்தை வைத்து அடையாளம் காணும் திட்டம் ஜார்க்கண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்றும், தனிநபர் தகவல்களுக்கு என்ன பாதுகாப்பு என்றும் வினவினர். ஒருசிலர் தடுப்பூசி திட்டத்தை பரவலாக்க எடுக்கப்பட்ட திட்டம் என்றாலும், பலர் தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த சான்றிதழ்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசும்போது, கோவிட் தடுப்பூசி எடுத்துகொள்ள ஆதார் எண் கட்டாயமல்ல எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்பை அவர் வெளியிட்ட 2 மாதங்களுக்கு பின்னர், கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஆதார் தகவல்கள் பயன்படுத்தபடும் என தேசிய சுகாதாரத்துறை அணையர் அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Aadhaar card, Corona