மக்களை அச்சுறுத்தும் பாகுபலி யானைக்கு காலில் காயம் - சிறப்பு குழு மூலம் கண்காணிக்கும் வனத்துறை

பாகுபலி யானை

யானையின் வலது பக்க  முன்னங்கால் மற்றும் பின்னங்காலில் காயம்  ஏற்பட்டுள்ளது.

 • Share this:
  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றி வரும் பாகுபலி யானைக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் , யானையை சிறப்பு குழு மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் அடிக்கடி வனத்தை விட்டு வெளியே வரும் ஒற்றை ஆண் காட்டுயானை "பாகுபலி" ஊருக்குள் சுற்றி வந்தது. அந்த ஒற்றை காட்டு யானை "பாகுபலி"யை பிடித்து ரேடியோ காலர் கருவி பொருத்தி அதன்  நடமாட்டத்தைக் கண்டறிய முடிவு செய்த வனத்துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால்  பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணி தோல்வியில் முடிந்தது.

  Also Read: சொந்த வீட்டில் ஓட்டைப்பிரித்து திருடிய நபர் - மகனை கம்பி எண்ண வைத்த தாய்

  இதனையடுத்து  அத்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.அடிக்கடி வனத்தில் இருந்து வெளியேறும் அந்த யானை சில வாரங்களாக வனப்பகுதியை விட்டு வெளியே வராமல் இருந்தது.இந்நிலையில் தற்போது மீண்டும் வனப்பகுதியை விட்டு "பாகுபலி" காட்டு யானை வெளியே வர தொடங்கியுள்ளது.

  Also Read:  போலியான வலம்புரி சங்கு.. கோடிகளில் நடக்கவிருந்த மோசடி - அலர்ட்டான போலீஸ் சிக்கிய இடைத்தரகர்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நேற்று மாலை கோத்தகிரி சாலையில், சென்ற பாகுபலியினை  அவ்வழியாக சென்றவர்கள் செல்போனில்  வீடியோவாக பதிவு செய்தனர். அதில் யானையின் வலது பக்க  முன்னங்கால் மற்றும் பின்னங்காலில் காயம்  ஏற்பட்டு இருப்பதும், அதன் காரணமாக யானை மெதுவாக நடப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து  காயத்தின் தன்மையை கண்டறிந்து அதற்கு ஏற்றார்போல் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: