ரூ.1 லட்சம் கடனுக்கு 9 லட்ச ரூபாய் வட்டி கேட்ட போலீஸ்.. ஐஜி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி..

வாசுதேவன் மற்றும் பிரமிளா
- News18 Tamil
- Last Updated: July 14, 2020, 12:30 PM IST
ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு 9 லட்சம் ரூபாய் கந்து வட்டி கேட்பதாக காவலர் மீது ஐஜியிடம் தம்பதியர் புகார் அளித்தனர்.
புதுச்சேரி திருக்கனூர் செட்டிப்பட்டை சேர்ந்தவர் வாசுதேவன். கூட்டுறவு பால் சங்கத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரமிளா. சொந்த நிலத்தில் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
வாசுதேவனும் கலால்துறையில் போலீசாக பணியாற்றும் வீரமுத்து என்பவரும் நண்பர்கள். 2 ஆண்டுகளுக்கு முன்னர் வாசுதேவன் வீரமுத்துவிடம் கடனாக ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார். மேலும் வீரமுத்துவிடம் வாசுதேவன் மாதாந்திர சீட்டும் கட்டி வந்துள்ளார். இதனிடையே வீரமுத்து வாசுதேவனிடம் தன்னிடம் வாங்கிய ரூ.1 லட்சத்திற்கு வட்டி, சீட்டு பணம் என 2 ஆண்டுகளில் ரூ.9 லட்சமாக மாறியுள்ளதாகவும், அதனை உடனே திருப்பி தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இதனை கேட்டு வாசுதேவன் அதிர்ச்சியடைந்தார். ரூபாய் 1 லட்சத்திற்கு வட்டி சேர்ந்து எப்படி ரூ.9 லட்சம் ஆகும் என கேட்டுள்ளார். போலீஸ் என்பதால் வீரமுத்து வாசுதேவனை மிரட்டியுள்ளார். கந்துவட்டியில்தான் மாட்டிக்கொண்டதை அறிந்த வாசுதேவன் செய்வதறியாது திகைத்துள்ளார்.
அதற்கு வீரமுத்து ஒரு யோசனையும் தெரிவித்துள்ளார். அதாவது வாசுதேவனின் நிலத்தை தனக்கு அடமானம் தருமாறு கூறியுள்ளார். அதன்படி வாசுதேவன் தன்னுடைய நிலத்தை வீரமுத்துவிற்கு அடமானம் எழுதி தந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் அந்த இடத்தை வீரமுத்து, கதிரேசன் என்ற மற்றொரு போலீஸ்காரருக்கு விற்றது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த வாசுதேவன் மற்றும் அவரது மனைவி பிரமிளா ஆகியோர் இதுகுறித்து கேட்டபோது கதிரவன் வாசுதேவனையும் அவரது மனைவி பிரமிளாவையும் அடித்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து திருக்கனூர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தபோது அங்கு புகார் ஏற்கப்படவில்லை.
Also read... கடவுள் ராமர் ஒரு நேபாளி: அவர் இந்தியர் அல்ல.. நேபாள பிரதமரின் சர்ச்சை கருத்து..
இதனால் இன்று காலை வாசுதேவன், தனது மனைவி பிரமிளாவுடன் ஐஜி அலுலவகம் வந்தார். அங்கு தான் கையோடு எடுத்து வந்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை திறந்து உடலில் ஊற்றி தீக்குளிக்க திட்டமிட்டனர். அங்கிருந்த பெரியக்கடை ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களை தடுத்து ஐஜி சுரேந்தர் சிங் யாதவிடம் அழைத்து சென்றனர்.
அவரிடம் தம்பதியினர் இரண்டு போலீஸ்காரர்கள் தங்களை மிரட்டுவதாக புகார் அளித்தனர். உடனே ஐஜி சுரேந்தர் சிங் யாதவ் காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதனை தொடர்புகொண்டு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து தம்பதியினரை போலீசார் காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
புதுச்சேரி திருக்கனூர் செட்டிப்பட்டை சேர்ந்தவர் வாசுதேவன். கூட்டுறவு பால் சங்கத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரமிளா. சொந்த நிலத்தில் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
வாசுதேவனும் கலால்துறையில் போலீசாக பணியாற்றும் வீரமுத்து என்பவரும் நண்பர்கள். 2 ஆண்டுகளுக்கு முன்னர் வாசுதேவன் வீரமுத்துவிடம் கடனாக ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார். மேலும் வீரமுத்துவிடம் வாசுதேவன் மாதாந்திர சீட்டும் கட்டி வந்துள்ளார்.