Latest Tamil News: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி செய்திகள் உடனுக்குடன்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இந்தியா முழுவதும் நிகழும் செய்திகள், உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள், அரசியல், விளையாட்டு, கொரோனா தொடர்பான செய்திகள் என அனைத்தையும் இங்கே அறியலாம்... உடனுக்குடன்

  • News18 Tamil
  • | May 05, 2021, 11:55 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 5 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    11:47 (IST)

    மதுரவாயல் அம்மா உணவகத்தை தாக்கியவர்கள் மீது காவல்துறை சாதாரண வழக்கு பதிவு செய்துள்ளது. திமுக ஆட்சியமைக்கும் முன்பே காவல்துறை ஆதரவாக செயல்படுகிறது என்றும்,  இன்னும் ஆட்சியமைக்காத சூழலில் திமுகவினர் அராஜகத்தை கட்டவிழ்த்துள்ளனர் எனவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    10:58 (IST)

    10:54 (IST)
    கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில. தடுப்பூசிகள் இல்லாததால் இரண்டாவது நாளாக தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறவில்லை. தடுப்பூசிகள் இல்லை என கரும்பலகையில் எழுதப்பட்டு இருப்பதால் ஊசி போட வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
    10:34 (IST)

    இன்னும் சற்று நேரத்தில் தமிழக ஆளுநரை சந்தித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.