Latest Tamil News Live : தமிழ்நாடு முதல் உலகம் வரை கொரோனா செய்திகள் உடனுக்குடன்

Today News Tamil - Live Updates: கொரோனா வைரஸ், தடுப்பூசி, கிரிக்கெட் அப்டேட் ,தமிழ்நாடு , புதுச்சேரி தேர்தல் கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | April 26, 2021, 12:29 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 5 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    14:23 (IST)

    கர்நாடகாவிலும் அமலாகின்றது முழு ஊரடங்கு.கர்நாடகாவில் நாளை முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய கடைகள் காலை 6 முதல் 10 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    14:13 (IST)

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட 10 கைது செய்யப்பட்டுள்ளனர்.

    13:53 (IST)

    ஸ்டெர்லைட் ஆலையால் 1050 டன் அக்சிஜன் உருவாக்க முடியும். ஆனால் 35 டன் மட்டுமே மருத்துவமனைக்கு பயன்படுத்த முடியும். மீதம் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த முடியும். - தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்

    13:29 (IST)

    அனைத்து மேஜைகளிலும் சிசிடிவி கேமிராக்கள் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்படும்.500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேஜை அமைக்கப்பட்டு தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் 

    13:29 (IST)

    வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்ய்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் 

    13:28 (IST)

    முகவர்களுக்கு கொரோனா  பரிசோதனை அல்லது தடுப்பூசி கட்டாயம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் 

    12:19 (IST)

    தமிழகத்தில் மற்ற ஆலைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும். தமிழகத்தில் உருவாகும் ஆக்சிஜனை வேறு எந்த மாநிலத்திற்கும் கொண்டு செல்ல கூடாது - டிடிவி தினகரன் (அமமுக)

    12:10 (IST)

    மே 2 வாக்கு எண்ணிக்கை அன்று உரிய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க  நேரிடும். - உயர்நீதிமன்றம்

    12:10 (IST)

     கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம்,கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல்,சமூக இடைவெளியின்றி  அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பிரச்சாரம் செய்ததே தொற்று பரவலுக்கான காரணம் -  உயர்நீதிமன்றம்

    12:10 (IST)

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் நீங்க காதில் வாங்கவில்லை. உங்கள் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை. - தேர்தல் ஆணையம் மீது தலைமை நீதிபதி காட்டம்