Latest Tamil News: தமிழ்நாடு முதல் உலகம் வரை கொரோனா வைரஸ், தடுப்பூசி என செய்திகள் உடனுக்குடன்

Today News Tamil - Live Updates: கொரோனா வைரஸ், தடுப்பூசி, கிரிக்கெட் அப்டேட் ,தமிழ்நாடு , புதுச்சேரி தேர்தல் கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

 • News18 Tamil
 • | April 23, 2021, 15:50 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 21 DAYS AGO

  AUTO-REFRESH

  11:39 (IST)
  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு... சட்ட ஒழுங்கு பிரச்னை எழும் என வாதம்
  10:2 (IST)

  மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது

  15:9 (IST)

  தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்அளித்துள்ளது . தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 250 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது.தனியார் மருத்துவமனைகளில் ரெம்டிவிசர் மருந்து கையிருப்பு இல்லை என்றால் அரசிடம் பணம் செலுத்தி பெற்று கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  14:12 (IST)


  சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு மேஜைகளை குறைத்தால் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

  14:12 (IST)


  நடிகர் விவேக் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், அதனை எதிர் மறையாக சிலர் மாற்றுவதை அவரது ஆன்மா ஏற்றுக்கொள்ளாது எனவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் பாண்ட்லே பால் விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி விற்பனையை துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தடுப்பூசி குறித்த அவநம்பிக்கையை இளைஞர்கள் மக்களிடம் போக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

  14:10 (IST)

  மதுரையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் பயணிப்பதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்யக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து திருப்புவனம், மானாமதுரை, கமுதி, பரமக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. பயணிகள், பேருந்துகளில் நெருக்கமாக நின்றுகொண்டு பயணித்ததுடன், படியிலும் தொங்கிச் சென்றனர். இதைக் கண்டும் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இருப்பினும், பயணிகள் நெருக்கத்தை குறைக்க கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

  14:10 (IST)

  ஆக்சிஜன் கசிவால் நாசிக் மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம் மனதை உருக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உயிரிழப்பை கேள்விப்பட்டு வேதனை அடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

  12:45 (IST)

  ஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாம் என  மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க  அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.

  12:32 (IST)

  கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதியின் காவலர் துப்பாகியால் சுட்டு தற்கொலை
  நீதிபதியின் துப்பாக்கி ஏந்திய காவலரான ரயில்வே காலனியை சேர்ந்த அன்பரசன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இன்று காலை முதல் காவலர் அன்பரசனை காணவில்லை என தேடிய நிலையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறையில் துப்பாக்கியால் சுடபட்ட நிலையில் உடல் கண்டுபிடிப்பு. திருமணமாகி மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் தன்னை தானே சுட்டுக்கொண்டுள்ளார்