Coronavirus Latest Updates (April 19): கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி தொடர்பான உடனுக்குடன் அப்டேட்

Today Coronavirus Cases - Live Updates in Tamil : தமிழ்நாடு, இந்தியா, உலக அளவில் கொரோனா தொடர்பான அப்டேட் உடனுக்குடன் அறியலாம்.

 • News18 Tamil
 • | April 19, 2021, 17:17 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED A MONTH AGO

  AUTO-REFRESH

  18:53 (IST)

  புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமல் 

  புதுச்சேரியில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.இரவு 8 மணிவரை மட்டும் ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிடலாம்; எட்டு மணிக்கு மேல் பார்சலுக்கு அனுமதி - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

  18:52 (IST)

  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 

  18:43 (IST)

  இன்று ஒரே நாளில் 10,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

   6,172 பேர் டிஸ்சார்ஜ், 44 பேர் உயிரிழப்பு

  17:34 (IST)

  திருவண்ணாமலையில் நடைபெற்ற ராணுவ ஆட்கள் சேர்க்கும் முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான நுழைவுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ரத்து.

  15:48 (IST)

  நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும்.மதுபானங்களை மொத்த விற்பனை செய்யக் கூடாது

  டாஸ்மாக் கடைப்பணியாளர்கள்  பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியீடு

  15:42 (IST)

  பீகாரில் கொரோனாவால் எம்எல்ஏ மேவாலால் சவுத்ரி மரணம்

  பீகார் முன்னாள் அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏவுமான Mewalal Choudhary கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு வரை நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக அவர் இருந்து வந்தார். தாராபூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்

  15:42 (IST)

  நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் ஒரே நாளில் ஆயிரத்து 255 புள்ளிகள் சரிந்து 47 ஆயிரத்து 568 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 356 புள்ளிகள் குறைந்து 14 ஆயிரத்து 263 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கு, பல்வேறு நிறுவனங்களில் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தில் பலர் தங்களது பங்குகளை விற்பனை செய்ததன் விளைவாக பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்னர்.

  14:27 (IST)

  39 ஊழியர்களுக்கு கொரோனா… புரசை சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட்டது. 

  13:5 (IST)

  கேரளா சொல்வோருக்கு இன்று முதல் இ-ரிஜிஸ்டிரேசன்!

  தமிழகத்தில் இருந்து கேரளா சொல்வோருக்கு இன்று முதல் இ-ரிஜிஸ்டிரேசன் (TN e-Registration )கட்டாயம் - தமிழக - கேரள எல்லையான வாளையாறு பகுதியில் கேரள அதிகாரிகள் கண்காணிப்பு தீவிரம்.
  கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமடைந்துள்ள நிலையில்,  இ-ரிஜிஸ்டிரேசன் பெறாமல் வரக்கூடிய பொதுமக்கள் கேரளாவிற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பட்டு வருகின்றனர்.

  13:2 (IST)

  மீண்டும் தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணி

  திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் இன்று காலை  தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறவில்லை.  இது குறித்து நீயூஸ் 18 தொலைக்காட்சி காலை 10 மணிக்கு நேரலையில் பதிவு செய்தது. இதையடுத்து திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ள தடுப்பூசி தொகுப்பில் இருந்து பொன்மலை ரயில்வே மருத்துவமனைக்கு முதல் கட்டமாக 100 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
  தேவைக்கு ஏற்ப கூடுதல் தடுப்பூசி வரவழைக்கப்படும். தற்போது தட்டுப்பாடு இல்லை. தடுப்பூசி செலுத்தும் பணி வழக்கம் போல் நடைபெறுகிறது என பொன்மலை ரயில்வே மருத்துவமனை கண்காணிப்பாளர் சவுந்தர்ராஜன் தகவல்.