Latest Tamil News (June 6):கொரோனா அப்டேட் , தமிழ்நாடு முதல் உலகம் வரை செய்திகள் உடனுக்குடன்

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 06, 2021, 07:35 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 15 DAYS AGO

    AUTO-REFRESH

    14:8 (IST)
     

    தமிழகத்தில் 1 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன - மத்திய அரசு 

    தமிழகத்தில் 1 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    14:7 (IST)

    சிகிச்சை அளித்திடும் வகையில் மேலும் கூடுதலாக 500 படுக்கை வசதிகள் கொண்ட கூடுதல் கோவிட் சிறப்பு மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

    13:55 (IST)

    தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கில் கார், ஆட்டோவில் பயணிக்க இ-பதிவு பெற இணையதளத்தில் புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது

    12:29 (IST)

    தமிழ் மொழியை மத்திய  அரசின் அலுவல் மொழியாக்க அரசு தொடர்ந்து பாடுபடும் - தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதி 

    அன்னைத் தமிழ் மொழிக்கு அணிகலன் செம்மொழித்தகுதி -  மு.க ஸ்டாலின்

    11:54 (IST)

    தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

    தடகள பயிற்சியாளர் நாகராஜன் விளையாட்டு பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாக விளையாட்டு வீராங்கனை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 29ஆம் தேதி நாகராஜன் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறையில் அடைக்கப்பட்ட நாகராஜனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று விளையாட்டு வீராங்கனைகள் தங்களுக்கும் விளையாட்டு பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளனர்.

    10:24 (IST)

    தமிழகத்தில் மேலும்  26 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

    ஏற்கனவே நேற்றைய தினம் 46 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று மேலும் 26 பேர் மாற்றம்.

    10:22 (IST)

    கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி பணி துவக்கம்

    கோவை மாநகராட்சி பகுதிகளில் 42 மையங்களில் கொரோனா தடுப்பூசி பணி துவக்கம். கோவையில் இரண்டாம் தவணை கோவேக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் துவங்கியது. மாநகராட்சி பகுதிகளில் 42 மையங்களில் தலா 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ரத்தனபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை முதல் 45 வயதிற்கு மேலானோர் ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர்.

    8:47 (IST)

    மலையாளம் பேசும் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை - டெல்லி அரசு மருத்துவமனை எச்சரிக்கை!

    மருத்துவமனையில் அலுவலக மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒன்றை தான் பயன்படுத்த வேண்டும், மலையாள மொழியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் உள்ள முன்னணி அரசு மருத்துவமனை ஒன்று செவிலியர்கள் இனி மலையாள மொழியில் பேசக்கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதற்கு செவிலியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    8:38 (IST)

    பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி தர முதல்வர் ரங்கசாமி மறுப்பு : இரண்டு நாட்களாய் முதல்வர் ரங்கசாமியுடன் பாஜக மேலிட பொறுப்பாளர் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி சந்திப்பில் இரு  அமைச்சர்களுக்கு முக்கிய துறைகளை ஒத்துக்க சம்மதம். ஆனால் துணை முதல்வர் பதவியை அளிக்க ரங்கசாமி மறுத்ததாக தகவல்.பாஜக தலைமைக்கு தகவல் தெரிவித்து மேலிட பொறுப்பாளர் மற்றும் புதுச்சேரி பாஜகவினர் காத்திருப்பு..