Latest Tamil News (June 4):கொரோனா அப்டேட் , தமிழ்நாடு முதல் உலகம் வரை செய்திகள் உடனுக்குடன்

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 04, 2021, 06:26 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 16 DAYS AGO

    AUTO-REFRESH

    14:43 (IST)

    தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

    தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

    14:42 (IST)

    கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க குழு அமைத்து தமிழக அரசு அரசாணை 

    கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.இந்த குழுவில் மொத்தம் 13 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.அதில் 4 மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து உத்தரவு.

    14:19 (IST)

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு தற்காலிகமாக செயல்பட  இயலுமா? நீதிபதிகள் கேள்வி

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி முடியும் வரை, தற்காலிக கட்டடத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு செயல்பட  இயலுமா?  நீதிபதிகள் கேள்வி.மத்திய,  மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு. வழக்கு விசாரணை ஜூன் 11 ம் தேதி ஒத்தி வைப்பு.

    14:7 (IST)
     

    சசிகலாவின் முயற்சி வெற்றி பெறாது - எடப்பாடி பழனிச்சாமி 

    சசிகலா அரசியலில் இருந்து விலகி விட்டேன் என கூறினார். தற்போது குழப்பம் விளைவிக்க முயற்சிக்கின்றார்.சசிகலா அதிமுகாவிலேயே இல்லை.குழப்பம் விளைவிக்கும் சசிகலாவின் முயற்சி வெற்றி பெறாது - எடப்பாடி பழனிச்சாமி 

    13:49 (IST)

    அதிமுக அலுவலகத்தில்  நடைபெற்று வந்த ஆலோசனை கூட்டம் நிறைவு

    13:49 (IST)

    கொரொனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகஅரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
    கொரொனா பரிசோதனை மையத்தையும் அதிகரிக்க வேண்டும்.தொற்று பரிசோதனை அதிகரிக்க வேண்டும். - எடப்பாடி பழனிசாமி

    13:48 (IST)

    ஆசிரியர் ராஜகோபாலனுக்கு உடல் தகுதி பரிசோதனை

    சென்னையில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில்,  ஆசிரியர் ராஜகோபாலன் 3 நாள் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்கின்றனர்.  முன்னதாக கேகே நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் பரிசோதனை மற்றும் உடல் தகுதி பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது.

    13:46 (IST)

    முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ.10 லட்சம் நிதியுதவி!

    தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ 10 லட்சம் நிதி அளித்துள்ளார்.


    13:29 (IST)

    தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வல்லுநர் குழு அறிவுறுத்தல். ஊரடங்கு குறித்த அறிவிப்பு நாளை வெளிவரும் எனத் தகவல் 

    13:27 (IST)

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மத்தியஅரசு நிறுவனமான தடுப்பூசி 

    நிறுவனத்தில் பாரத்பயோடெக் உயர் அலுவலர்கள்  ஆய்வு