புதுச்சேரியில் பார்களில் கொரோனா பரிசோதனை

புதுச்சேரியில் பார்களில் கொரோனா பரிசோதனை

புதுச்சேரி பார்

புதுச்சேரியில் மது குடிக்க வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றது.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்று குறைந்து வருகிறது. துவக்கத்தில் மருத்துவமனைகளில் மட்டும் எடுக்கப்பட்ட பரிசோதனை தற்போது நகரின்  முக்கிய சந்திப்புகளில் எடுக்கப்படுகிறது.

இதன் ஒரு கட்டமாக இன்று மது பார்களின் முன் கொரோனா பரிசோதனையை சுகாதார துறையினர் இன்று மாலை மேற்கொண்டனர். மது பார்களில் தனி மனித இடைவெளி, கிருமிநாசினி தெளிப்பு, நேர குறைப்பு என கட்டுப்பாடுகள் இருந்தாலும் இன்று முதல் மதுபார்களுக்கு  வருபவர்களுக்கு சோதனை நடத்தப்படுகிறது.

Also read... கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா? வல்லுனர்கள் விளக்கம்இன்றைய நிலவரப்படிபுதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 206 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 33,452 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4,100 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 28,774 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுச்சேரியில் இன்று  1 நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மொத்த  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 577 ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதார துறை தெரிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: