தமிழகத்தில் கொரோனா தொற்று 4058 ஆக உயர்வு: இன்று மட்டும் 508 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று 4058 ஆக உயர்வு: இன்று மட்டும் 508 பேர் பாதிப்பு
(கோப்புப் படம்)
  • Share this:
தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 4058 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று 11,858 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 4058 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்மூலம், கொரோனா உயிரிழப்பு 33 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடலூரில் 68 பேருக்கும், செங்கல்பட்டில் 38 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 38 பேருக்கும், விழுப்புரத்தில் 26 பேருக்கும், திருவள்ளூரில் 18 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.






 

 
First published: May 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading