Latest Tamil News (June 3):கொரோனா அப்டேட் , தமிழ்நாடு முதல் உலகம் வரை செய்திகள் உடனுக்குடன்

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

 • News18 Tamil
 • | June 03, 2021, 10:36 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 15 DAYS AGO

  AUTO-REFRESH

  18:41 (IST)

  தவறான கொரோனா பரிசோதனை முடிவுகளை கொடுத்து வந்த இரண்டு தனியார் ஆய்வகங்களுக்கு சீல்  வைக்கப்பட்டுள்ளது. - அமைச்சர் செந்தில்பாலாஜி

  18:9 (IST)

  தமிழகத்திற்கு கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசி வழங்கப்படும் - மத்திய அரசு 

  ஜூன் 1 முதல் 15 வரை தமிழகத்திற்கு 7.4 லட்சம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் - மத்திய அரசு 

  17:22 (IST)

   தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் ஆலோசனை

  பாரத் பயோடெக் நிறுவனம் தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தலைமைச்செயலகத்தில்  இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்  தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான திட்ட பணிகள் , கட்டமைப்பு வசதிகள் ,நிதி ஒதுக்கீடு. மூல பொருட்கள் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை மேற்க்கொள்ளப்பட்டது.ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் பயோடெக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுசீந்திர இலா,  செயல் இயக்குனர் சாய் பிரசாத், தொழில்துறை சிறப்புசெயலாளர் /சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

  16:31 (IST)

  முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய உதவி ஆய்வாளர்.

  திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் முத்துசெல்வம் தனது ஒரு மாத சம்பளம் 31,384 ரூபாயை தமிழ்நாடு முதலமைச்சரின்  கொரோனா சிறப்பு நிதிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் வழங்கினார்.

  16:31 (IST)

  மருத்துவர்கள் இல்லாத கிளினிக்கிற்கு சீல் வைத்த சுகாதாரதுறையினர்
  கோவை மாவட்டம் கந்தேகவுண்டன் சாவடி அருகே செயல்பட்டு வந்த அன்பு கிளினிக்கிற்கு சீல் வைத்து சுகாதாரதுறையினர் நடவடிக்கை. மருத்துவர்கள் இல்லாத நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த செவிலியர் மற்றும் உதவியாளர் ஆகியோர் கிளினிற்கு வரும் நபர்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.தகவல் அறிந்து வந்த சுகாதார துறை மற்றும் காவல் துறையினர் அன்பு கிளினிக்கை சீல் வைத்தனர்.

  16:30 (IST)

  பிளஸ் டூ தேர்வு நடத்த கூடாது என்பதுதான் எங்களது நிலைப்பாடு, அதன் பின்னர்தான் நீட் குறித்து சொல்ல முடியும் நீட் பற்றி இன்னும் எந்த ஒரு பேச்சும் எழவில்லை - வானதி ஸ்ரீனிவாசன்

  16:29 (IST)

  ரவுடி சிடி மணி மீது வளசரவாக்கம் போலீசார் கொலை முயற்சி, ஆயுத தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 

  உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி சிடி மணி மீது வளசரவாக்கம் போலீசார் கொலை முயற்சி, ஆயுத தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பிச் சென்ற போது பாலத்தில் விழுந்ததால் காயத்துடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரவுடி சிடி மணி அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயுதங்கள் வைத்திருப்பது, கொலை முயற்சி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

  16:27 (IST)

  நடிகை சாந்தினியின் பாலியல் புகார்: முன்னாள் அமைச்சரை 9-தேதிவரை கைது செய்ய தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு.

  முன் ஜாமின் வழக்கை ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அதுவரை மணிகண்டனை கைது செய்ய கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், முன் ஜாமின் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

  16:26 (IST)

  கர்நாடகாவில் முழு ஊரடங்கு  ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டது.

  16:13 (IST)