Latest Tamil News (June 9): தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 21ம் தேதி கூடுகிறது - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 09, 2021, 18:40 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 6 MONTHS AGO

    AUTO-REFRESH

    19:2 (IST)


    கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    18:37 (IST)

    வரும் 21ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

    தமிழக சட்டப்பேரவை  கூட்டதொடர் வரும் ஜூன் 21ம் தேதி கூடுகின்றது.எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது  ஜூன் 21ம் தேதி முடிவு செய்யப்படும். ஆளுநர் உரை நிகழ்த்துகிறார் - சபாநாயகர் அப்பாவு 

    18:8 (IST)

    11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு வாபஸ் 

    11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு அந்தந்த பள்ளிகளே நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள வழங்கப்பட்ட அனுமதி ரத்து; நுழைவுத் தேர்வு நடத்துவது ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என எதிர்ப்பு எழுந்ததால் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

    17:45 (IST)

    தஞ்சை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் -  2 வாரங்களில் அறிக்கை அளிக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

    17:42 (IST)

    ஊரடங்கில் தளர்வுகள்தான் வழங்கப்பட்டுள்ளது, விலக்கிக் கொள்ளப்படவில்லை. - பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்திருப்பது வேதனை அளிப்பதாக உயர்நீதிமன்றம் கருத்து

    17:41 (IST)

    ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

    17:40 (IST)

    முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு மர்மநபர் தொலைபேசியில் கொலை மிரட்டல். - சசிகலாவின் தூண்டுதலே காரணம் என காவல் நிலையத்தில் புகார்

    17:40 (IST)

    ஓ.பன்னீர்செல்வத்தை கேட்காமல் கட்சியில் எந்த முடிவையும் எடுக்க கூடாது என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு. - கட்சி கட்டுப்பாட்டை மீறுவோர் மீது நடவடிக்கை என ஜெயக்குமார் எச்சரிக்கை

    17:40 (IST)

    வங்கக் கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு..மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் பாதுகாப்பாக செல்ல வானிலை மையம் எச்சரிக்கை

    17:39 (IST)

    சென்னையில் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்.கொறடாவை தேர்வுசெய்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை