Latest Tamil News (May 10): கொரோனா அப்டேட் , தமிழ்நாடு முதல் உலகம் வரை செய்திகள் உடனுக்குடன்

Today News Tamil - Live Updates: கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | May 10, 2021, 11:32 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    14:14 (IST)

    மதுரையில் நாளை ரெம்டெசிவிர் மருந்து வழங்க இன்று டோக்கன் வழங்கப்பட்டது.நாளை 75 பேருக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    13:11 (IST)


    16வது சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகிறார் எடப்பாடி பழனிசாமி.அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு. 

    12:39 (IST)


    மத்திய அரசின் ரெம்டெசிவர் மருந்து ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

    12:35 (IST)


    தமிழகத்திற்கான தினசரி ரெம்டெசிவர் ஒதுக்கீட்டை 20,000  குப்பிகளாக்க வேண்டும் 

    மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைபேசி மூலமாக கோரிக்கை 

    12:29 (IST)

    தஞ்சை மருத்துவக் கல்லூரியில், கொரோனவால் உயிரிழந்தவரின் உடலை கடந்த நான்கு நாட்களாக மனைவி மற்றும் குழந்தைகள் கண்ணீருடன் தேடி வருகின்றனர்.

    12:29 (IST)

    புதிய திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

    12:12 (IST)

    தமிழகத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரணம் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின.்

    12:09 (IST)


    நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம் டெசிவர் மருந்து விற்பனை இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது மருந்து வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    11:42 (IST)

    கோவை ரயில் நிலையம் முன்பு உள்ள 9  கடைகளுக்கு  மாநகராட்சி அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய்  அபராதம். பார்சல் வழங்காமல் கடைக்குள்  அமர்ந்து டீ குடிக்க அனுமதித்ததாலும், சமூக இடைவெளி இல்லாததும், முக கவசம் இல்லாதது ஆகியவற்றால் நடவடிக்கை.

    11:42 (IST)

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கனரா வங்கியில் பணியாற்றிய 4பேர்க்கு கொரோனாதொற்று ஏற்பட்டதால் வங்கி மூடல்